Tuesday, June 2, 2009

அன்னையர் தினம்

அடுத்த தலைமுறை ஆனந்தமாய்க் கொண்டாடும்
அமெரிக்காவிலிருந்து வாழ்த்துக்கள் சொல்லும்
முதியோர் இல்லங்களில் " Get Together"கள் கூடும் .

நண்பா

இதை தான் சாப்பிடனும்- அம்மா தீர்மானித்தாள்
இது தான் சீருடை - பள்ளிக்கூடம் பணித்தது
இந்தக் கல்லூரி  தான் உனக்கு-அப்பா அறிவுறுத்தினார்
இவர்கள் தான் கடவுள்-சமூகம் நிர்பந்திக்கிறது
சிந்திக்கிறேன் .....
எதை நானே முடிவு செய்தேன்?
நினைவில் வந்தது நீ .


Monday, June 1, 2009

கறுப்பு- உன் இதயம்

அன்று
கறுப்பு உனக்கு பிடிக்கும் என்றாய் ...
என் வீட்டு வெள்ளை நாய்க்குட்டியை
"Blacky" என்ற பெயரில் அழைக்கிறேன்
காகத்தின் குரல் கீதம் என்கிறேன்
கமல் அஜித் படங்களை விட
ரஜினி விஷால் படங்களையே பார்க்கிறேன்
கறுப்பு சட்டை அணிந்து நடக்கிறேன்
சபரி மலை தொடர்ந்து செல்கிறேன்
அமெரிக்காவின் சிறந்த அதிபர்
Barack Obama என்கிறேன் ...
ஆனால்
இன்று தான் தெரிந்தது
எல்லா நிறங்களையும் உள்ளடக்கி
எதையும் பிரதிபலிக்காத நிறம் கறுப்பு என்று
எல்லா உணர்வுகள் இருந்த போதும்
காதலை வெளிப்படுத்தாத உன் இதயம் போல

அன்பின் அம்மா

பூட்டிக்கிடக்கும் நம் வீடு, புடவைக் கட்டிய வயதான தாய்மார் கருப்பு மையிடாத அப்பாவின் தலைமுடி , 'அப்பம்மா பார்க்கிறாங்க' என்கிற மகள் ...