Showing posts with label uravugal. Show all posts
Showing posts with label uravugal. Show all posts

Sunday, July 7, 2013

மகள்


          சேட்டை செய்தே
          கோபிக்க  வைப்பாள்,
          அவளை சேட்டை செய்யாமல்
          இருக்க,
          கோபித்து கொள்வாள்.

          என் தாயை
          பெயர் சொல்லி அழைப்பாள்
          என் தந்தைக்கும்
          தாயாய்
          முடி வருடி கொடுப்பாள்
       
           மைதானம் சென்று
          விளையாட அழைப்பாள்,
          விளையாடி தளர்ந்தால்
          தாயாய்
          வியர்வை துடைப்பாள்.

         அளவின்றி அன்பை
         திரும்ப தருவாள்,
         என் மேல்
         என் தந்தை அன்பை
         அளந்து புரிய வைப்பாள்
                 
          பூச்சாண்டி கதைகள்
          சொல்வாள்,
          பூச்செண்டாய் அடுக்கடுக்கி
          கற்பனைகள் சேர்ப்பாள்.

          அழாமல்  பள்ளி செல்லும்
          வித்தை கற்கிறாள்
           எனினும்
          அழுதே சாதிக்கும் வித்தையை
           மறக்க மறுக்கிறாள்

           சோற்றை வாயில் திணிக்கும்
           தன்  தாயிடம்
           "எம்மா ,என்ன ஏன் தான்
            இந்த பாடு படுத்றாங்களோ ?"
            என்பாள்,
         
            சோறு திங்க
            தங்கை மறுத்தால்
            உணவை வாயின்
            உள்ளே தள்ள முனைவாள்.

            கடவுளுக்கும் 'good bye'
            சொல்வாள் ,
            அவர் சொல்ல மறுக்க
            'bad boy' என்பாள்.

  

Sunday, June 2, 2013

She Grows

                                                     3 YEARS AND 3 MONTHS





Saturday, June 1, 2013

மகள் புராணம்- II

                                                

 வீட்டில் இருக்கும் கருப்பு நாய்க்குட்டியைப்  பற்றி  என் அண்ணன் மகள் :

 " நான் தான்  BLACKAN Dog க்கு மம்மம் வைக்குறேன்,ஆனா அவன் 

என்னையே பார்த்து குரைக்கிறான்,ராஜூப்பா. நீங்க சீக்கிறோம் வந்து 

அடிங்க- ன " என்கிறாள் .

*********************************************************************************

சென்னைக்கு யாரெல்லாம் வர்றீங்கனு கேட்டா  :  

" நான், அம்மா ,அப்பா, தாத்தா, அப்பம்மா, சின்ன மீ,பெரிய மீ, BLACKAN, Love 

Birds, குஞ்சு குருவி எல்லோரும் டிக்கெட் போட்டு சென்னைக்கு வர்றோம்ன " 

என்று வீட்டு ரேஷன் கார்ட்ல புதுசா ஆள் சேர்த்துக்கிறா.  

சின்ன மீ  ------> மொட்டை மாடில Concrete Tank ல வளர்க்கபடுற சின்ன மீன்கள்.

பெரிய மீ -------> Hall ல கண்ணாடி தொட்டியில வளர்க்கபடுற பெரிய மீன்கள்.

********************************************************************************
பெரும்பாலும் புத்தகத்தையோ செய்திதாளையோ படிச்சுட்டு இருக்கிற  

என்னிடம் :

"சும்மா சும்மா Paper படிக்காத சொன்னன்ல.வந்து ஏங்கூட விளையாடுங்க." 

என்பாள்.

*********************************************************************************

இடுப்பில் கை, மடக்கிய  கால்கள், பாதம் இடிக்க அவள் பரதம் ஆட முற்படும் 

போது பரதநாட்டியம் HOD  Mr.நடராஜர் கூட அசந்துடுவார்.அப்படி Pose 

கொடுப்பா.

********************************************************************************* 

கோவிலுக்கு சென்று வருகையில் சாமிக்கு 'Bye Bye' சொல்லிவிட்டு , 

பிள்ளையார் சாமி ஏன் Silentஆ இருக்கு. அதுக்கு அவங்க அம்மா 'Bye Bye' 

சொல்ல கத்து கொடுக்கலையோ-னு    கேட்பாள் .

******************************************************************************

" நீங்க பண்றீங்கள,  அது மாதிரி " என்று சொல்லி,  'மொக்க பையன்' என்ற 

வார்த்தையை   சொல்லவும் , மொட்டை மாடியின் ஒரு படியில் இருந்து 

மூன்றாவது படிக்கு துள்ளவும் முயற்சிக்கிறாள். 

அவளுக்காகவே நான் சில யோக்கியத்தனத்தை கற்றுக்கொள்ள 

முயற்சிக்கிறேன்.

******************************************************************************** 
இறந்து போன என் தங்கையின் புகைப்படம் பார்த்து 

"அத்தை எப்போ போட்டோலருந்து வெளில வருவாங்க?  நான் அவங்ககிட்ட 

பேசனும். மொபைல் நம்பர்  சொல்லுங்க  " என்பாள்.

********************************************************************************


           
 

Saturday, March 23, 2013

மகள்களுக்கு

உயிர்மெய்களுக்கு,
           உங்கள் சித்தப்பாவின் இரண்டாவது கடிதம்.முதல் மடல் மூத்தவளுக்கு.இரண்டாவது இருவருக்கும் சேர்த்தே.

அன்போ,அறிவோ

பண்போ ,பரிவோ

பணிவோ,துணிவோ

இனி எதை தருவதாய் இருந்தாலும் இருவருக்கும் சேர்த்தே தருவதாய் நாம் முடிவு செய்திருக்கிறோம்.ஒருவளை மட்டும் தூக்கி வைத்தால், என்னையும் தூக்குங்கள் என்று அடுத்தவளும் கைகள் விரித்து சொல்லி ,இரு கைகளிலும் எங்கள் எதிர்காலங்களை தூக்கும் சுகத்தை தந்ததால், இது நாம் எடுத்த முடிவு தான். அவ்வாறு தூக்கி, நாம் மூவரும் சூரியனை பார்த்த போது கண் கூசியது சூரியனுக்குமாக  இருந்திருக்கலாம் .அது வேற விடயம்.

கடிதம் எழுத முடிவாகிற்று,என்ன எழுதுவது? இந்த காரணத்திற்காக கடிதம் எழுதுகிறேன் என்று சொல்லி கடிதம் எழுதும் கட்டுப்பாடும்,வரைமுறையும் நமக்குள் இல்லாததால் எதையாவது பேசலாம் என்று நானே  முடிவு செய்திருக்கிறேன். உங்கள் முதல் வருடத்தின் இரண்டாவது பாதியில் உங்கள் நா பேச முனைந்த வார்த்தைகள் போல.

இன்று, இளையவளை சில நிமிடங்கள் கண்காணிக்கும் சுகத்தை ஏற்றுக்கொண்டேன்.தீக்ஷா, நீ அந்த சில நிமிடங்களில் சொல்லி கொடுத்த நித்திய சித்தாந்தங்கள் எத்தனை தெரியுமா.

சிரிப்பு,அழுகை

சோகம்,கோபம்

எதுவாய் இருந்தாலும்

அந்த கணம் தான்.

உன்னை மனம் குளிர்ந்து சிரிக்க வைக்க எந்த செலவும் இல்லை. தலைக்கு மேலாக,கைகளால் தூக்கினால் போதுமானது.கீழிருந்து மேல் போகும் போது சிரிக்கிறாய்.மறுபடியும் இறங்கும் போது சிரிப்பு சிறைபடுகிறது.அழுகையும் அப்படிதான்.

புதிதாய் ஓர் இடம் நீ கண்டால், உன் மகிழ்ச்சிக்கான மதில் சுவர் இருந்ததாய் நான் பார்த்திடவில்லை.அவ்விடத்தில் இருக்கும் பொருள்களும் அதற்கான சிறப்பும் உனக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது.ஊர்ந்து போகும் எறும்பு முதல் .............................................

அந்த நிமிட வாழ்க்கைக்கு உங்களை யார் பழக்கியது.என்னால் தான் இதை செய்யமுடியாமல் போகிறது.இறந்த காலத்தின் சோகம்.கோபம்,பகை,சூழ்ச்சி,
துரோகம்,காயம்,தோல்வி எதையும் மறக்க முடியாமலும், வருங்கால வாழ்க்கைக்கான சுகம்,பதவி,பொருள்,வசதி,நிம்மதி என்று முடிவு பெறாத தேடல்களிலும் எங்கள் நிகழ் காலம் எங்களிடமே அடமானமாய் இருக்கிறது போலும்.நீங்கள் தான் இதை என்னக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள்.


உங்கள் வாழ்க்கையோடு

நானும் தொடர்வேன்....

Saturday, December 15, 2012

மகள் புராணம்


தன் இரு விரல்களின் இடையில் திருநீறு எடுத்து,கண்களை மூட சொல்லி,நெற்றியின் நடுவே அவள் வைக்கும் போது,எனக்கு மட்டும் அல்ல,கார்ல் மார்க்சுக்கு கூட கடவுளிசம் பிடிக்கும்.

                       

*********************************************************************
 என்னோடு நடக்கையில் என்  ஆள்காட்டி விரலை தன் ஐந்து விரல்களால் இறுக பிடித்து,தெரியாத முகம் யாராவது அவளை பார்த்து சிரித்தால் என் கால்களுக்கு இடையில் தஞ்சம் தேடும் போது , என் மீது எனக்கே நம்பிக்கையை தருகிறாள்.

**************************************************************************

கடுகை "அகுது" என்றும்,மத்தாப்புவை "அப்பாத்து" என்றும்,என்றோ பார்த்த யானையை "நேற்று நான் பார்த்தேன்ல அந்தததததத  யானையா ?" என்றும் சொல்லும் அவள் மழலை சொல்லின் இலக்கண பிழைகளும்,சொல் பிழைகளும்  தமிழின் புதிய இலக்கணமாய் மாறுகிறது.

************************************************************************
பல்லியின் வாயில் அகப்பட்ட பூச்சிக்காக ஏங்கும் போதும்,

மழையில் நனையும் தெருவோர நாய்க்குட்டியின் "அம்மா DOG எங்கே"?அதுக்கு யாரு மம்மம் ஊட்டுவா? என்று கேட்கும் போதும்,

SUN ஏன் வெளில வெயில இருக்குது? அதுக்கு கசகசன்னு இருக்குமோ? என்கிற  போதும்,

உளவியலையும்(psychology) அறிவியலையும் ஒரு சேர அவளே உணர்த்துகிறாள்.

****************************************************************************

ஆடை குறைப்போடு இருக்கும் நடிகர் நடிகை புகைப்படங்களை பார்க்கும் போது "ஐயய,இந்த Uncle Dress Change பண்ணல,SHAME SHAME ! " என்று சிரிப்பாள்.




****************************************************************************

பயணங்களின் போது எதிர் வரும் மலையை பார்த்து,Mountain என் கூடவே வருது என்று அழுது, அவள் தந்தையின் கைகளை பற்றி கொண்டு,"Mountain போ,எங்கப்பாட்ட சொல்லி கொடுத்துலுவேன் " என்று அவள் தந்தையை மலை  விழுங்கியாய் ஆக்குவாள்.

****************************************************************************

எதிர் வீட்டில் இருக்கும் எங்களுக்கு எதிராய் செயல்படும் ஒருவரின் வீட்டு கொடியில் தொங்கும் அழுக்கான வேட்டியை  பார்த்து "Dirty யா,இருக்கு.New Dress வாங்கி கொடுப்போமா?" என்கிறவள்,பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்று எங்களுக்கும் மெய்ஞானம் கற்பிப்பாள்.

****************************************************************************

 சுவரில்அவள் கிறுக்கல்களும்,ஆங்கில அகராதியில் (Dictionary) பூச்சாண்டி என்று சொல்லி அவள் வரைந்த இரண்டு கோடுகளும், மடிகணினியின் விசைதட்டிலிருந்து (Laptop Keypad) பெயர்த்து எடுக்கப்பட்ட சில எழுத்துக்களும் அவள் மலழை அடையாளமாய் கோபமின்றி எங்கள் வீட்டில் இருக்கிறது.

***************************************************************************

ஐஸ் கிரீம் வாங்கி தரவில்லை என்றால் வானம் பார்த்து "சாமி , ஆஜுப்பா(நான் தான்) சொன்னாவே கேட்க மாட்லான், நீ Note பண்ணிக்கங்க.அப்புறமா Punish கொடுங்க  ன " என்று கடவுளுக்கு வேலை கொடுப்பாள்.

****************************************************************************

அவள் தாய் வீட்டுக்கு சென்றால் "ஸ்தோத்திரம்,அல்லேலூயா,ஏசப்பா" என்று பிரார்த்தனைக்கு மண்டியிட்டு தயாராகும் அவள், எங்கள் வீட்டில் இருக்கையில் என் அம்மாவுடன் சேர்ந்து "ஓம் சக்தி,பிள்ளையார் சாமி"
என்று விளக்கேற்றி பூஜைக்கு தயாராகி, தன்னை இடம் பார்த்து பொருத்தமாக்கி கொள்கிறாள்(adaptation).

****************************************************************************

கடந்த 27 வருடங்களில் எனக்கு என் பெயர் உபயோகப்பட்டதை விட அதிகமாய் சென்ற 6 மாதங்களில் அவளுக்கு உபயோகம் ஆகிருக்கிறது.

**************************************************************************** 

Wednesday, October 31, 2012

மறுபடியும் அவள்

             என்றாவது  தனிமையில் இருக்கையில் எதையாவது பற்றி சிந்திக்கவோ இல்லை எழுதவோ நினைத்தால் எனக்குள் தோன்றும் இரண்டாவது தலைப்பையே பெரும்பாலும் எழுத நினைக்கிறேன்.முதல் தலைப்பு சமீப காலங்களாக "அவளை"ப் பற்றியே இருப்பதால் எடுத்த முடிவு இது. எனினும் சில மாதங்களாக எதையும் எழுதாத நான் இன்று,எழுத,அந்த முடிவே நல்ல தொடக்கமாக இருக்கும் என்ற நினைப்புடன், அவளைப் பற்றி மறுபடியும்.

                        இருபதுகளில் ஒரு ஆணின் சிந்தையில் "அவள் " என்பது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.அதுவும் காதலை ஒழித்து வைத்தும்,மறுக்கப்பட்ட காதலிலும்   வாழும் ஆண்கள் பார்க்கும் பொருள்களும் மனிதர்களும் அவள் சார்ந்த நினைவுகளையே தரும். 

நிற்க.

நான் எழுத விழைந்த "அவள்" இவள் அல்ல .என்னவள் "மகள்".   

அன்பு மகளுக்கு,
                              இதைப் படிக்க முடியாத,படித்தால் புரியாத உனக்கு உன் பிரியமான சித்தப்பாவின் கடிதம் இது.எடுத்து உரைக்கப்பட்ட அன்பை விட எழுதி உரைக்கபட்டவை இன்னும் ஆழமானவை.மறுபடியும் படிக்கும் வாய்ப்பும்,படிக்கும் ஒவ்வொரு முறையும் தன் உன்னதம் கூட்டும் சௌகர்யமும் எழுத்து வடிவிற்கு உண்டு.எனவே இக்கடிதம்.கடிதத்தின் நீளத்தை வைத்து அதை படிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்யும் வழக்கம் என்னைப்போல் உனக்கும் இருந்தால் இக்கடிதத்திற்கு மட்டும் விலக்கு கொடு.

                         எழுதுவது முடிவாகிவிட்டது.என்ன மொழியில் எழுதுவது? மொழியின் கை பிடித்து நடக்க கற்றுக் கொண்டிருக்கும் உனக்குப்  புரிந்த கடவுள் மொழியில் எழுத எனக்குத்  தெரியாததால் நம்மொழியில் தொடர்கிறேன்.நம்மொழியை நீ நிச்சயம் கற்றுக்  கொள்வாய் என்பது அடுத்த காரணம்.
                           இரண்டு வருடங்களுக்கு முன், நீ வர போகிறாய் என்பது முடிவானாலும் யாராய் வருவாய் என்பது முடிவாகாத காலத்தில் உள்ளுணர்வில் நாங்கள் அனைவரும் உனக்கு பெண் வடிவமே கொடுத்தோம்.உன் பெயர் இது தான் என்று நீ பிறக்கும் முன்னரே முடிவு செய்யப்பட்டது உனக்கு தெரியுமா?
                       
                         அறுவை சிகிச்சை அறையின் வெளியே கைப் பிசைந்து நின்ற நாங்கள்,உன் அழுகைக் குரல் கேட்டதும்,இலேசாக கதவு திறந்து எட்டி "பாப்பா பிறந்திருக்கிறாள்" என்று சொன்ன செவிலியிடம் முந்திக் கொண்டு உன்னைப்  பார்க்க முயற்சித்ததும்,உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை செல்லமே.உன்னிடம் மட்டும் ஒரு உண்மை சொல்கிறேன்.நீ நலமாய் இருக்கிறாயா என்பது மட்டுமே என் எண்ணவோட்டத்தில் இருந்தது.அறுவை சிகிச்சை செய்து கொண்ட அண்ணி என்னவானாள்  என்று நான் நினைத்திடவே இல்லை அன்று. 
                            
                           செவிலி பெண் உன்னை ஒரு பஞ்சு துணியில் எடுத்து வெளியில் கொண்டு வந்ததும்,என் அம்மா உன்னை கைகளில் வாங்கியதும்,என்னிடம்அவள் உன்னை தர,கையில் எடுக்க எனக்கு இருந்த அச்சமும்,எடுக்க மறுத்ததும் இன்றும் ஞாபகம் இருக்குதடி சின்னவளே. அன்று நீ எப்படி இருந்தாய் தெரியுமா?இதோ.

ஏதோ ஜப்பானிய குழந்தை போல் உனக்கும் தோன்றுகிறதா உன்னைப் பார்த்தால்?


                                கால் நூற்றாண்டாய் பெண் குழந்தை இல்லாத நம் வீட்டிற்கு நீ கொண்டு வந்தது வெறும் வெளிச்சம் மட்டும் இல்லை கண்ணே,ஒவ்வொருவருக்கும் புது உறவு முறைஅங்கிகாரம்.என் தந்தை தாத்தா ஆனார்,அம்மா அப்பம்மா ஆனாள்.நான் சித்தப்பா ஆனேன்.என் அண்ணனும் அண்ணியும் தங்கள் தாம்பத்திய வாழ்க்கைக்கான சான்றை பெற்றார்கள்.இந்தியாவின்  இன்னும் ஒரு பெண் குழந்தை நீ, நம்வீட்டில் முதல் பொன் குழந்தை நீ தானே.

                           உன் தாய் வழி தாத்தா வீட்டில் நீ இருந்த முதல் 40 நாட்கள் எவ்வளவு நீளம். நிலமும் நிலவும் அந்த 40 நாட்கள் மட்டும் ஏன் மெதுவாக சுற்றியது என்று இன்று வரை பதிலில்லை.வேலை தேடுபவன் பகலும்,நோயாளியின் இரவும் போல அந்த காலம்,ஐயயோ  கொடுங்காலம்.

                         வேலைக்கு செல்லும்போது சனி ஞாயிறுகளை மனதில் வைத்தே தொடங்கும் ஒவ்வொரு திங்கள் கிழமை போல,உன்னைப்  பார்க்க வரும் தருணம் சுற்றியே மற்ற நாட்கள் ஓடும் காலம் அது.உன்னைப் பார்க்கும்  தருணமும் அதில் நீ தரும் நினைவுகளும் அடுத்த முறை உன்னைப் பார்க்கும் வரை பிரிவைத் தாங்கும்.அந்நாட்களில் கடவுளை தரிசிக்க  வரும் பக்தன் போலவே நம் உறவு நின்றது.

                       நெல்லையிலிருந்து குமரிக்கு எங்கள் குமரி வந்த காலம் தானே வசந்தகாலம்.இன்று நீயே எங்கள் நிகழ் காலமும்,வருங்காலமுமாகி வளர்ந்திருக்கிறாய்.உன்னைப் பார்க்க வந்த நம் சொந்தத்தினர் நீ உன் தந்தை போலவும்,என் தந்தை போலவும்,என் தாய் போலவும் இருக்கிறாய் என்று அவரவர்க்கு பிடித்த ஜாடை சொன்னார்கள்.
என்னைப் போலவும்,உன் இன்னொரு சித்தப்பாவைப் போலவும் இருக்கிறாய் என்று சொன்னவர்களும் உண்டு.ஒருவேளை உன் தாய் வழி சொந்தங்கள் அவர்கள் குடும்ப வழியில் உன்னை அடையாளம் கண்டிருப்பார்கள்.புரிகிறது.அந்த வயதில் நீ யார் போல் இருந்தாய் என்பதை நீயே முடிவு செய்ய இதோ ஒரு ஆணின்  புகைப்படம்.

                             யாராய் இருப்பினும் எல்லோருக்கும் பொதுவான  உருவமாய் நீ அறியப்பட்டது ஒரு தேவதையாய்.வெள்ளை நிற ஆடை இல்லை,பின்னோட்டத்தில் இசையும் இல்லை,முதுகு ஒட்டி இறகும் இல்லை,எனினும் நீ தேவதை.தேவதைக்கான அந்த அடையாளங்கள்  யாரோ ஒருவரின் கற்பனைக்கான ஒப்பனை.நீ உண்மை.உன் மெய் தேவதை.

                               நீ பேசிய முதல் மொழி உனக்கு ஞாபகம் வருகிறதா?அது அழுகை."எல்லா குழந்தயும் பேசற மொழி தான சித்தப்பா" என்று நீ இன்று சொல்வது புரிகிறது.குழந்தைகளுக்கு மட்டுமில்லை பெரும்பாலும் பெண்கள் அதிகமாய்,புலமையோடு பேசும் மொழிகளில் அதுவும் ஓன்று என்பது உனக்கும் தெரிய வரும்.அழுதே நீ சாதித்த காரியங்கள் எத்தனை எத்தனை.இந்த கடிதம் உனக்கு புரிய வரும் காலத்தில் நீ அழுது சாதித்தவை பல கடல் தாண்டியிருக்கும்.

                             நீ அழுவாய்,உடனே சிரிப்பாய்,உன் வாய் திறந்து கை சப்புவாய்,உளறுவாய்,
சிணுங்குவாய்.கை உயர்த்தி ஜாடை மொழி பேசுவாய்.குப்புற கவிழ முயற்சித்து ஒரு புறம் சாய்வாய்,அடுத்த கை வெளியில் எடுக்க முடியாமல் சாய்ந்து கொண்டே அழுவாய்.ஒரு நாள் குப்புற கவிழும் வித்தை கற்று கொண்டாய்.சிரித்த முகத்துடன் தூங்கி எங்களின் ஆயுசு கூட்டினாய் அன்று.
                       


                                    குப்புற கவிழ நீ கற்றதும் உன் அடுத்த கட்ட வளர்ச்சிகள் இன்னும் வேகமாகவே  இருந்தன.குப்புற தரை பார்த்திருந்த நீ ஓரிரு நாட்களில் கழுத்து உயர்த்தி முகம் பார்க்கவும் செய்தாய்.அடுத்த சில வாரங்களில் உன்னை இருத்தி வைத்தால் எவர் பிடியுமின்றி நீயே சாயாது உட்கார பழகினாய்.அடுத்த முயற்சி இன்னும் சிறந்தது.நம் வீட்டு தரைகளுக்கு உரிமை கொண்டாடி தரையெல்லாம் தவழ்ந்தாய்.நீ தவழ்வாய் என்பதற்காகவே அத்தரைகள் தங்களை சுத்தமாக்கி  தவமிருந்தது போல் காத்திருக்கும்.தரையை பார்த்து பொறாமையுடன் உன்னை சொந்தம் கொண்டாட அடுத்தது சுவர் காத்திருந்தது. 


                            தானே உட்கார கற்றுக்கொண்ட நீ தூங்கி எழுகையில் அம்மாவென்று அழைத்து நீயே உட்கார்ந்தாய்.அடுத்தது  சுவரையும் ஏமாற்றாமல் அதை பிடித்து நிற்கவும் கற்று கொண்ட நீ வாழ்க்கையின் நடைக்கு உன்னை தயார்படுத்தினாய்.எழுந்தாய்,விழுந்தாய்,நடந்தாய்.
முதலில் மற்றவர் உதவியுடன் பின்பு எவர் துணையும் இன்றி.இது தான் வாழ்க்கையின் தத்துவம் என்று எனக்கு நீதான் உணர்த்தினாய்.
தத்தி தத்தி நீ நடந்ததும்,விழுந்ததும் அழுததும்,
உடனே சிரித்து எழுந்ததும் இன்றும் கண்களில் பிம்பமாய் நிற்கிறதே கண்மணியே.

                         இவை உன் வாழ்வின் முதல் வருடம் தான்.இன்னும் எழுத ஒரு முழு வருட நிகழ்வுகள் உண்டு.மெதுவாய் தொடர்கிறேன்.


இப்படிக்கு,

ராஜுப்பா.



                                          

Friday, January 27, 2012

மகள்

காலை நிலா
இரவு சூரியன்
இயற்கையின் ஆச்சர்யம்
எங்கள் வீட்டு அதிசயம்

சுடாத வெளிச்சம் 
நடுங்காத குளிர்
வானத்து முகில்
முகில் தெளிக்கும் மழை
மழை நனைக்கும் நிலம் 
நிலத்து நந்தவனம்
நந்தவன தென்றல்
தென்றலின் தீண்டல்

விரிவாக சொன்னாலும் 
நடமாடும் ஐம்பூதம்

பொக்கை வாய் சிரிப்பு
எட்டிப் பார்க்கும் பற்கள்
பொய் பேசாத நா
சாயம் பூசாத இதழ்
வஞ்சம் இல்லாத கண்
ஜப்பானிய மூக்கு
வடஇந்திய தமிழ் 

தடுமாறும் நடை
நிறைவான எடை
இல்லாத இடை
தேவதையாய் உடை

கால் நூற்றாண்டு கனவு
வருத்தாத நினைவு
ஒறுத்தாத உறவு

அடிக்கடி மாறாத  
என் மின்னஞ்சலின்
தற்போதைய திறவுசொல்


நானும் வந்துட்டேன் 
mindla வச்சிருக்கேன் 


ஏன் இப்படி

செல்லமே

Thursday, January 26, 2012

அண்ணா

என் தந்தை விந்திட்ட,
எனக்கு முன்னரே 
மண் பார்த்த
மூத்த விதைகள் 

என் தாயின்
தொப்புள் கொடியின்
முதல் வரிசை மலர்கள்

பத்து மாதம் வாடகையின்றி
நான் இருந்த வீட்டின் 
மூத்த குடிகள் 

தாய்ப்பாலை நானும் குடிக்க 
மிச்சம் வைத்த நல்லவர்கள் 

பண்டம் தின்ன 
சண்டை வந்தாலும்
கடைக்குட்டி என் பங்கை
குறைக்க முயலாதவர்கள்
முடியாதவர்கள்

நண்பர்கள் நான் தேட
வாய்ப்பு தராத நண்பர்கள் 

அண்ணன் என்று நான் 
அழைக்காத போதும்
படைக்கு அஞ்சாதவர்கள்,
என் தமயன்கள்.


அவள்

அன்பின் அகரம்
அடக்கத்தின் உயரம்

"மிச்ச(ம்)"த்தில் உச்சம்
அச்சத்தில் துச்சம்

கடவுளின் அடியாள்
கணவனுக்கும் அடியாள்

மகளின்றி வருந்தியவள்
வருத்தத்தில் மெலிந்தவள்

பேத்தியை தோழியாக்கியவள்
தோழியே வாழ்வாக்குபவள்

தோற்க பழகியவள்
தோற்றே வென்றவள்








அவரின் அடையாளம்

கறுப்பு தோல்
வெள்ளை வேட்டி 

சுருண்ட முடி
முறுக்கிய மீசை

கதரில் உடை
கம்பீரமாய் நடை 

1960's Royal Enfield

கொஞ்சம் கோபம்
மிஞ்சும் பாசம்

பல சமயம் "ஆணை"யர்
புரிய வைத்தால் ஊழியர்












Thursday, November 17, 2011

Sunday, July 31, 2011

என் பேரு இவளவு அழகா??????

என் பேரு இவளவு அழகா கூப்பிட முடியும்னு இன்னைக்கு தான் தெரிஞ்சிகிட்டேன்.அந்த அழக ரசிக்றதுக்கு கால் நூற்றாண்டு ஆகிருக்குது. அவள முதல் முறை பார்க்றப்பவே decide பண்ணியாச்சு. இவ தான்னு.ஆனா இப்போ தான் அவ என்ன நம்பலாம், Worth தான்ற அளவுக்கு develop ஆகிருக்கா.இல்லைனா என் பெயர மட்டும் சொல்ல மாட்டா இல்ல.

இருந்தாலும் மொழி என்னோட வாழ்க்கையில் அரசியல் பண்ணுது .அவ பேசற மொழி எனக்கு தெரியாது.நான் பேசற மொழி அவளுக்கு புரியாது.அவ பேசற மொழிய நான் பேச இந்த சமுகம் ஒத்துக்கவும் செய்யாது. ஆண் ஆதிக்க சமுதாயம் இல்ல.?  இல்ல.
மொழி தமிழ்நாட்டு அரசியல மட்டும் இல்ல என் வாழ்க்கையுலும் விளையாடுது.

பெயர சொல்ற அளவுக்கு develop ஆகிருக்ற அவ நிச்சயம் என்னோட அன்பையும் புரிஞ்சிப்பா.It would certainly take some time. I would ensure that she says " I love you.I love you more than I love my father".ஆனா அதுக்கு நெறைய competition இருக்கும்.என்னோட அண்ணன் , என் அப்பா,என் அம்மா ,அவளோட அப்பாவான என்னோட மூத்த அண்ணன் இவங்க  எல்லோரையும் தாண்டி நான் அவ மேல அன்பு காட்டணும்.அத அவ புரிஞ்சக்கணும்.

However I am so happy that my 18 months old niece calls me by name in her style"Ajeeeeeeeeev".Thank you so much குட்டிமா.








Tuesday, June 2, 2009

நண்பா

இதை தான் சாப்பிடனும்- அம்மா தீர்மானித்தாள்
இது தான் சீருடை - பள்ளிக்கூடம் பணித்தது
இந்தக் கல்லூரி  தான் உனக்கு-அப்பா அறிவுறுத்தினார்
இவர்கள் தான் கடவுள்-சமூகம் நிர்பந்திக்கிறது
சிந்திக்கிறேன் .....
எதை நானே முடிவு செய்தேன்?
நினைவில் வந்தது நீ .


அன்பின் அம்மா

பூட்டிக்கிடக்கும் நம் வீடு, புடவைக் கட்டிய வயதான தாய்மார் கருப்பு மையிடாத அப்பாவின் தலைமுடி , 'அப்பம்மா பார்க்கிறாங்க' என்கிற மகள் ...