Saturday, August 13, 2011

வறுமை

உண்ணாவிரதம் உடலுக்கு  நல்லது - 
செய்தித்தாள்  படிக்கிறாள் மாடி வீட்டு சிறுமி .....
நான் தினமும் இருக்கிறேன் -
இது தாள் பொறுக்கும் சிறுமி





Sunday, August 7, 2011

He has different abilities; am disabled

சின்ன பசங்க மூலமா நமக்கு message சொல்றது படங்கள் மட்டும்(கன்னத்தில் முத்தம்மிட்டால் படம்   ) இல்ல ....நம்மள சுத்தி இருக்கிறவங்களே சொல்லலாம்னு நேற்று தெரிஞ்சிகிட்டேன்.

எங்க apartmentla  இருக்கிற பையன் 11 வயசு .தான் செய்யாத தவறுக்கான தண்டனைய அனுபவிக்ற கட்டாயம் அவனுக்கும்.குறை மாசத்தில பிறந்ததா சொல்லுவாங்க..அவன் கால்கள் வலு இல்லாம்ம இருக்கும்..

 வீட்டுக்கு உள்ளையே அடைஞ்சு இருக்ற வேண்டிய கட்டாயத்தால அவன் வயசுக்கு ஏத்த maturityum கம்மியா இருக்ற மாத்ரி எனக்கு தோணும் ....தன்னோட பழகுறதுக்கு தனக்கு பிடிச்ச மாதரியா , தன்ன புரிஞ்ச மாதரியா யாரும் இல்லையே அப்படின்றதும் அவன் problem...

தன்னோட வயச 11yrs சொல்ற அவன் ,2011 கும் 2000 கும் உள்ள difference தான் இந்த 11 yrs nu  சொல்ல மாட்டான்.2000 ல பிறந்தா இப்போ எனக்கு என்ன வயசுன்னு கேட்பான்.English Alphabetsa இன்னும் rhymes மாதரியே சொல்லுவான்.ABCD ...EFG...HIJK.......

நேற்று பேசிட்டு இருக்கறப்ப "Daily prayerla என்னடா வேண்டுவனு கேட்டேன் "...

"சீக்கிரம் நடக்கனும்னு வேண்டுவேன் .."
"சீக்கிரம் College போகணும்னு வேண்டுவேன்"
"இந்தியாவில் இருக்கிற மக்கள் எல்லாம் மன அமைதியோட நிம்மதியா சந்தோசமா வாழணும்னு வேண்டுவேன் ".......

சொன்னான் ...அதோட நிறுத்திட்டேன் ....

அவனுக்கு யாரு இது சொல்லி கொடுத்ருபாங்கனு எல்லாம் தெரியல...இதையே சினிமாவில எடுத்திருந்தால் இந்த scenela அவன்  என்னோட "கன்னத்தில் பளார் பளார்னு " அவன் அறையுறது மாதிரி எடுக்க வேண்டியது தான்...படத்தோட பேரு "கன்னத்தில் பளார்விட்டால் "........

Your Eyes but My Views

Dear Kiddos,     Another letter from Rajuppa. Wait, wait, wait.  I think I should stop using Rajuppa while writing letters to you, for I h...