மனமே
என் மனமே
என் நிழலே
எந்தன் பிரதியே
ஏன் கலக்கம் ?
விழி மூடா,
நீ கண்ட
கனவுகள் எங்கே?
களவு போனதா ?
கலைந்து போனதா ?
ஏன் தடுமாற்றம் ?
யோகம் நம்பாத
தன்னை நம்பும்
உந்தன்
முயற்சி எங்கே ?
முடிந்து போனதா ?
மயங்கி போனதா ?
என் மனமே
ஏன் கலக்கம் ?
உழைப்புக்கு
ஊதியம் கேட்கும்
உந்தன் உறுதி எங்கே ?
பாறை போன்ற
உந்தன் தீர்க்கம் எங்கே ?
ஏன் தடுமாற்றம் ?
நிலம் நோக்காது
நிமிர்ந்து நில், மனமே !
கலக்கம் தவிர்.