Sunday, June 9, 2013

போகிற போக்கில்

Ensure that you share a minimal part of your 'cutting' with your superior and senior officials, particularly with

those who are at the verge of retirement. They would do anything to protect themselves and hence you.-----

------up-growing officer 'Under the Table'  Arumugam.

********************************************************************************

கள்ளுக்கடையில 'சரக்கு' போடறதுக்கு முக்காடு போட்டு போனாங்க நம்ம

பயலுக  , இப்போ  Corporate Company Get Together -ல சரக்கு போடாததனால

தல குனிஞ்சி அவமானத்தோட வரானுங்க ...........THAT IS THE LIFE-----------------

சரக்கு போதையில்  'Quarter' Gopal.

********************************************************************************

அக்பருக்கு முன்னாடியே "secular-அ" இருந்ததும், கமல்ஹாசன விட அதிகமா

Get-up change பண்ணதும் எங்க பயலுக தான்.----------- School Leave-ல

அடுத்தடுத்து நடக்கும்  திருவிழா-ல கோவில்,மசூதி, சர்ச்னு பாகுபாடு

இல்லாம பிச்சை எடுக்கும் 'Beggar' BaalPaandi (spelling corrected for numerology).

********************************************************************************

 இது  Globalisation era. பட்டவராயருக்கு கடா வெட்டுனா, படையலோட ஒரு Full

FOREIGN சரக்கு தான் வேணும் ........................பட்டவராயரோட பூஜாரி மாடசாமி.

********************************************************************************
மேற்கு வங்காளத்தோட முதலமைச்சரா ஆனா கூட , 'எங்கம்மா'

தள்ளுவண்டியில வர காய்கறிக்காரன்ட பேரம் பேசாம வாங்க மாட்டாங்க....

Health Secretary, Govt.of Tamilnadu ஆனா கூட எங்க அண்ணி Ooty Vegetables Store, Shopping

Malls-ல  Vegetables பேரம் பேசி வாங்கமாட்டங்க...............

*********************************************************************************

College Hostel-ல, நாகர்கோயில் seniors/juniors பார்த்தா ஒரு feel வந்ததா ?

Bangalore-ல வேலைப் பார்க்கிறப்ப தமிழ்நாடு பசங்களோட சேர்ந்துதானே

இருந்த?

Off -Campus Interview போனப்ப , நீ படிச்ச college பையன recruit பண்ணுன இல்ல?

Golti, Mallu இதெல்லாம் யாரு வெச்ச பேரு தம்பி ? 

Facebook-ல ரஜினிகாந்த் fans member-ஆ இருக்கியா?                                                        

                                ஆனா,இங்கயே பிறந்து, இங்கயே இருந்துட்டு இருக்கிற நான் 

ஒரு சாதி உணர்வோட இருக்கறதா சொல்ற இல்ல ?ஒரு பெரிய குரூப்- 

உள்ளாடி தன்ன சின்ன குரூப்-ஆ சேர்த்து , ஒற்றுமையா தான் தம்பி, நாங்க 

வாழ பழகி இருக்றோம். அவங்க இந்த ஆளு , இவன் நம்ம ஆளு அப்படினு 

சொல்லுவோமே அது உணர்வு தானே தவிர வெறி இல்லப்போ...........................

பிரிவினை அரசியல் எங்க காலத்த விட உங்க காலத்தில தான் அதிகமா 

இருக்குது, தம்பி ...............

-------------------------------இன்னும்  அதிகமாகவே சொன்னார் அவர் 

*********************************************************************************
மச்சி, Official e-mails அனுப்புரப்ப, Facebook  Status Update செய்றப்ப  ஒரு சில

வார்த்தைகளாவது அடுத்தவங்களுக்கு புரியாத vocabulary use

பண்ணணும்.அப்போ தான் பயலுக மிரண்டு இருப்பானுங்க..................................----

------------- 'Peter' PAUL

*********************************************************************************

10 வருஷமா field-ல இருக்கிற Trisha-வ விட Diet Conscious-ஆ இருந்தது எங்க

அப்பத்தா தான்.

செவ்வாய் - முருகன் விரதம்

வெள்ளி    -   அம்மன் விரதம்

ரெண்டு நாளும் காய்கறி தான்,மாமிசம் கிடையாது.

சனி கிழமை ஒரு  நேர சாப்பாடு தான்.மற்ற நாலு நாளும் மீன் கண்டிப்பா.

அமாவாசை, பௌர்ணமி, முழு நாள் விரதங்களும் உண்டு. காலைல நிச்சயமா

Vit-D சூரிய நமஸ்காரம்.

என்ன அத அவுங்க , socio-religious,cultural practice அப்படின்ர பேர்ல செஞ்சாங்க.

TRISHA-க்கு Dietitian சொல்லி கொடுக்கறாரு.


********************************************************************************

மக்கள் நல்ல மனசாட்சியோட இருக்றாங்க....காசு வாங்கினா கட்டாயம் ஓட்டு

போட வந்துடறாங்க.....Election In-charge வந்து கேட்டாலும் காசே தரலைன்னு

சொல்லிடறாங்க... ......................

--------------------உட்கட்சி தேர்தலுக்கு ஆளுக்கு 200 ரூபா கொடுத்த வட்ட

செயலாளர் வண்டு முருகன்.  

*********************************************************************************

No comments:

Post a Comment

Your Eyes but My Views

Dear Kiddos,     Another letter from Rajuppa. Wait, wait, wait.  I think I should stop using Rajuppa while writing letters to you, for I h...