Monday, March 23, 2015

அன்பு மகள்களுக்கு,
                          என்ன எழுதுவது என்று முடிவு செய்யாமல் எதையோ எழுத தொடங்கும் சித்தப்பாவின் கடிதம்.நாளை பெரியவள் தர்ஷி செல்லத்தின் ஐந்தாவது பிறந்த தினம். எங்கள் மூத்த மகள் , இந்த மண்   தொட்டு, நம் மனைகள் தவிழ்ந்து, விழுந்து, எழுந்து , நடந்து ,ஆடி, சாடி, தளர்ந்து , எங்கள் மனங்கள் திருடிய ஐந்து அற்புத , ஆச்சர்ய வருடங்கள்.
                   
                  நேற்று தர்ஷிமா உன்னோடு தொலைபேசியில் பேசிய போது , " எப்ப ராஜுப்பா வருவீங்க " , என்ற முதல் கேள்வியோடு, " நான் ஒரு கேள்வி கேட்டா, நீங்க ஏன் 5 கேள்வி கேட்கறீங்க ? ", என்று கேட்கிறாய். ஒரு வேளை  இதே கேள்வியை நான் பணி செய்த போது என் சக பணியாளர் என்னிடம் கேட்டிருந்தால் ,  நான்  கோபம் கொண்டிருக்கக் கூடும்.

                     சில தினங்கள் முன்பு  திருக்குறள் வாசிக்கையில் ,  " தான் கோபப்பட்டால் எடுபடும் இடத்தில் ,ஒருவன் தன்  கோபத்தை அடக்க வேண்டும். மற்ற இடத்தில் கோபத்தை அடக்கினால்  என்ன அடக்காவிட்டால்  என்ன  " என்று வாசித்தேன்.  கற்க கசடற என்ற வள்ளுவர் வழி வந்தவன் அல்ல நான். 'நிற்க அதற்க்கு தக' , அது யாருக்கோ சொன்னது போல தான் புரிந்து வைத்து இருக்கிறேன். எனினும் உன்னிடம் கோபம் வரவில்லை.  பதிலுக்கு சிரிப்பும், கொஞ்சம் பூரிப்புமே இருந்தது. ஒரு வேளை , எங்கள் மகளான உன்னிடம் தோற்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை  போலும்.
   
             ' என்னுடைய பிள்ளை என்னை ஜெய்க்கிறதே
            என்னை விட உயரத்தில் பறந்து, சிகரம்  தொட,...'
என்ற திரைப்பட பாடல் நினைவுக்கு வருகிறது.

                        இந்த வீட்டில் வெறும் 5 வயதான நீ, பெரியவள் என்ற நிலை அடைந்த அசௌகர்யம் நினைத்து சில நேரம் வருந்தி இருக்கிறேன்.  உனக்கு பிறகு நம் வீட்டில் இரு தங்கைகள் உனக்கு வந்ததின் வெளிப்பாடு அது. ஒருவேளை அது உந்தன் குழந்தை பருவத்தின் .........to be continued..

Your Eyes but My Views

Dear Kiddos,     Another letter from Rajuppa. Wait, wait, wait.  I think I should stop using Rajuppa while writing letters to you, for I h...