என்
விந்திட்ட வினை
வினையிட்ட விதை
உதிரத்து உதயம்
தேகத்து அசல் நகல்
என்
மண வாழ்வின் சாட்சி
மரபணுவின் நீட்சி
என்றோ வரும்
என் முடிவுரைக்கு
தயாராய் நானியற்றும் முன்னுரை
மகளே வா!
வளர்வோம் வா!
குழந்தையாய் நீயும்,
தந்தையாய் நானும் !