Wednesday, November 30, 2011

கடமை தவறேல்

 "மச்சான்,மச்சான் எந்திரிடா" .................... "ராஜேஷ் டேய் எந்திரிடா, இன்னைக்கு Microprocessor Lab இருக்கு "....

" மச்சி நேற்று தான் நான் பொங்கல் வடை சாப்டேன். நாளை மறுநாள் தான் மறுபடியும் பொங்கல்........" நான் உளறினேன். .............

" ஏன்டா, பொங்கலுக்கும் MP Lab கும் என்னடா சம்பந்தம் .நேற்றுமாடா சரக்கடிச்சே? "........

"இல்ல மச்சி..........நீ Day Scholar உனக்கு நம்ம பொங்கல் matter தெரியாதுல. திங்கள் வியாழன்  ரெண்டு நாளும் Hostel Messla Sleeping Dose பொங்கல் வடை  போடுவானுங்க.அத வச்சுதான் ரெண்டு Lab Session ம் ஞாபகம் வச்சிருப்பேன்.அதே தான் சொல்ல வந்தேன் "..........

"கொய்யால , பொங்கல் வடை சாப்டே ரெண்டு Lab கும் Attendance Lag ஆனது போதும்.இன்னும் ரெண்டு  வாரத்தில  Model Practical Exam ஒழுங்கா இந்த Spl.Session ஆவது வந்து சேரு.நான் கெளம்பறேன்". சொல்லிட்டு கிளம்பிட்டான் சோழன்.

அறை மணி நேரத்துக்கு அப்புறம் மெதுவா எந்தரிச்சு பார்த்தப்ப  T.Nagar Ranganathan Street மாதிரி  busya இருக்கிற Rest Rooms freea இருந்தது.பக்கத்துல இருந்த முத்துராமன்  ரூம் பூட்டி இருந்தது. நான் அப்படியே  ஷாக் ஆகிட்டேன்.

 குளிச்சு எடுத்துட்டு ரூமுக்கு வந்து என் T-Shirta தேடினேன்,கிடைக்கல.சரி பனியானாவது இருக்கானு தேடினேன்.நல்ல வேளை  யாரும் அத எடுக்கல.பனியன் போட்டுட்டு கீழ வந்து ஆனந்த் பாபுவோட Slim Fit Shirt போட்டுட்டு, அங்க இருந்த Lab Coat எடுத்துட்டு மெஸ்ஸுக்கு போனேன்.[Karl Marx-ஓட  Communism படிக்காமலே நாங்க Hostela அதே  follow பண்ணுவோம்.அவனவன் வச்சிருக்கிற Arrear Papers தவிர எதுவுமே இங்கே Private Ownership கிடையாது.]


சூடா பூரி சாப்பிடறப்ப Mess Master Bai சொல்லி தான் தெரிஞ்சது இன்னைக்கு Warden, Chief Warden Hostela Inspection வரானுங்கன்னு. சாதரணமா Snacks Item இருந்தா தான் முத்துராமன்  அவன் ரூம பூட்டுவான்.இன்னைக்கு அனேகமா அவன் உள்ள படிச்சுட்டு இருந்துட்டு வெளில பூட்ட சொல்லிருப்பான்.

முத்துராமன் - அவனுக்கு என்ன எப்படியும் 95% attendance வச்சிருப்பான்.நாம தான் இன்னும் 2 வாரம் தொடர்ந்து classuku போகணும் இல்லனா வழக்கம் போல Princi Roomla attendance பிச்சை வாங்க வேண்டியது தான்.அதுவும் அந்த Princi Office Asstnt சக்கரபாணி எதோ தான் ஒரு Vice Principal மாதிரி சீன் போடுவான்.

பூசாரினால சாமிய வெறுத்தது மாதிரி இவனாலே  Princia பார்க்கணும்னா  காண்டா இருக்கும்.  Prime Minister பின்னாடி நிக்கிற NSG மாதிரி முறைப்பா Safari Pant Shirt போட்டு நின்னாலும் அவன் ஒரு Dummy Piecenu seniors நிரூபிச்சாங்க.

[ போன semester exam முடிஞ்சதும் Final year Seniors ஆறு பேர் அந்த ஆள காளவாக்கம் டீ கடைல வச்சு மொத்து மொத்துனு பின்னிட்டாங்க."Sorry தம்பி என்ன விட்டுடுங்கன்னு" அந்த ஆள் கதறிருக்றார்."மன்னிச்சிடுங்க அண்ணானு" அவரு ஆறு பேர்டயும் சொல்ல வச்சிருக்காங்க Seniors.

அடிச்சிட்டு வரும் போது அவருக்கு ஒரு டீ வாங்கி கொடுத்து இனிமேல் Attendance போடறதுக்கு scenu போட்ட மறுபடியும் எவனாவது வந்து உனக்கு போடுவானுங்கன்னு சொல்லி ..........இப்படி தான் அவரு Dummy Piece ஆகிருக்றாரு.]

Lab Coat மாட்டிட்டு Labku உள்ள போகலாம்னு நினைக்றப்ப Lab Attender அழகர்சாமி மறிச்சார்.செம கடுப்பா இருந்தது.
 என்னயா!அறை மணி நேரம் latea வர.எங்க Shoe? .கிளம்பு நிற்காத....

நான் பதில் சொல்லல. கிளம்பி வந்துட்டேன்.Ph.D பண்ணின Professorsae  சும்மா இருந்தாலும் இந்த ஆள் சும்மா இருக்க மாட்டான்.பசங்க என்ன Doubt கேட்டாலும் சொல்ல மாட்டான்.பொண்ணுங்கட்ட போய் வளிவான். பாதி பொண்ணுங்க Experiment output வரலைனாலும் Labla நல்ல மார்க் வாங்கறதே இவனால தான்.  இந்த அழகர்சாமிய Dummy Piece ஆக்கி அழுகினசாமியா மாற்ற வேண்டிய கடமை இப்போ  எங்ககிட்ட இருக்கிறது மறுபடியும் புரிஞ்சது.

இன்னும் ஒரு Semester. அது வரைக்கும் பொறுமையா இருங்கடா Junior பசங்களா.நாங்க கடமை தவற மாட்டோம்.







No comments:

Post a Comment

Your Eyes but My Views

Dear Kiddos,     Another letter from Rajuppa. Wait, wait, wait.  I think I should stop using Rajuppa while writing letters to you, for I h...