சேட்டை செய்தே
கோபிக்க வைப்பாள்,
அவளை சேட்டை செய்யாமல்
இருக்க,
கோபித்து கொள்வாள்.
என் தாயை
பெயர் சொல்லி அழைப்பாள்
என் தந்தைக்கும்
தாயாய்
முடி வருடி கொடுப்பாள்
மைதானம் சென்று
விளையாட அழைப்பாள்,
விளையாடி தளர்ந்தால்
தாயாய்
வியர்வை துடைப்பாள்.
அளவின்றி அன்பை
திரும்ப தருவாள்,
என் மேல்
என் தந்தை அன்பை
அளந்து புரிய வைப்பாள்
பூச்சாண்டி கதைகள்
சொல்வாள்,
பூச்செண்டாய் அடுக்கடுக்கி
கற்பனைகள் சேர்ப்பாள்.
அழாமல் பள்ளி செல்லும்
வித்தை கற்கிறாள்
எனினும்
அழுதே சாதிக்கும் வித்தையை
மறக்க மறுக்கிறாள்
சோற்றை வாயில் திணிக்கும்
தன் தாயிடம்
"எம்மா ,என்ன ஏன் தான்
இந்த பாடு படுத்றாங்களோ ?"
என்பாள்,
சோறு திங்க
தங்கை மறுத்தால்
உணவை வாயின்
உள்ளே தள்ள முனைவாள்.
கடவுளுக்கும் 'good bye'
சொல்வாள் ,
அவர் சொல்ல மறுக்க
'bad boy' என்பாள்.
No comments:
Post a Comment