அன்பு மகள்களுக்கு,
'நலம் நலமறிய ஆவல்' என்று பாரம்பரியமாய் தொடங்கப்படும் உறவு முறை தமிழ் கடிதங்கள் போல் நம் கடிதம் தொடங்கபடவேண்டிய அவசியம் இல்லை.ஏனனில் இக்கடிதம் எழுதும் போது நீங்கள் என் அருகிலே இருக்கிறீர்கள்.மேலும் உங்கள் நலம் சார்ந்தே எங்கள் நலம் இருப்பதால், நம் நலம் பிரித்து சொல்லப்பட வேண்டியது அன்று.இன்று நாம் நலமாய் இருக்கிறோம், நாளை பற்றிய எதிர்பார்ப்பும்,நம்பிக்கையும் உண்டு. எனவே நாம் நலமாய் இருப்போம்.
இன்று தீக்ஷி குட்டிசெல்லத்தின் முதல் பிறந்த நாள். சில நாட்கள் முன்பு தான், உன்னை அறுவை சிகிச்சை அறையின் வெளியில் நின்றுகொண்டு வரவேற்றது போலிருந்தது.அதற்குள் ஒரு வருடம் கடந்திருக்கிறது.
சொல்ல போனால் நம் வாழ்வின் கடந்த மூன்று வருடங்கள் மிகவும் வேகமாகவே சென்றிருக்கின்றன.
உங்கள் அருகில் இருக்கும் போது வேகமாய் பூமி சுழல்வது போலவும், உங்களிடம் இருந்து தள்ளி வருகையில் ஏதோ நோயாளியின் இரவு போலவும் அது சுழல்வதாய் தெரிகிறது.காலம் ஒரு காலன். அது நமக்கு பிடிக்கும் போது வேகாமகவும், நாம் வெறுக்கும் போது மெதுவாக முடிவெடுக்கும் அரசாங்கம் போலவும் கடக்கும்.எனினும் உணர்ச்சிகளுக்கு மதில் எழுப்பிவிட்டு, எதார்த்தமாய் யோசித்து பார்க்க முயற்சிக்கிறேன்.
என் வாழ்வின் கடந்த மூன்று வருடங்கள் மட்டும் வேகமாய் சென்றதற்கு காரணம், என் அன்புச்செல்விகளான உங்களால் தான்.இந்நாட்களில் உங்கள்
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் அருகில் இருந்து பார்த்து கொண்டிருக்கிறேன்.உங்களின் வளர்ச்சி இந்நாட்களில் வேகமாய் இருந்திருக்கிறது.உங்களின் இன்றைய முதிர்ச்சியையும் நேற்றைய முயற்சியையும் ஒரு சேர என் மனதில் நிறுத்தி இருப்பதால் வந்த குழப்பம் இது.
நீங்கள் குப்புற படுக்க ஆரம்பித்த போது, என் நினைவில் உங்கள் கழுத்து உறைத்தது ஞாபகம் இருக்கும்.தவிழ ஆரம்பிக்கும் போது கவிழ்ந்து,கழுத்து தூக்கி,முகம் பார்த்து சிரித்தது நினைவில் நிற்கும்.நடக்க ஆரம்பிக்கையில் ,நடக்க முயற்சித்து விழுந்து,எழுந்து,சிரித்து, அழுதது கண்களில் பிம்பம் ஆடும். இன்று "May,I come in madam?" என்று தர்ஷி சொல்லும் போது,நீ "மத்தாப்பு" -வை, "அப்பாத்து" என்று சொன்னது ஞாபகம் வரும். மொத்தத்தில் இன்று நடப்பதையும்,நேற்று நடந்ததையும் ஒரு சேர நினைவில் கொள்ள முயற்சிப்பதால்,என்றோ நடந்தவை நேற்று நடந்தது போல் தோன்றுகிறது. இதனால் தான் கடந்த மூன்று வருடங்கள் வேகமாய் சென்றது போல் எனக்கு
தெரிந்திருக்கிறது .
சில தினங்கள் முன்பு எதோ ஒரு விவாதம் விளையாட்டாய் வீட்டில் நடக்கும் போது தர்ஷி செல்லம், "நீங்க,சித்தி பேச்சு தான் கேட்டு நடப்பீங்களா?" என்று கேள்வி கேட்டாய். குரல் தான் உன்னுடையது. வார்த்தையும் வாக்கியமும் உன்னுடையது அல்ல.பதில் இன்று கோகுல் சித்தப்பாவும், நாளை நானும் சொல்ல வேண்டியது.
அப்பம்மாவை எனக்கு பிடிக்கும் அவளை விட தாத்தாவை எனக்கு பிடிக்கும். இன்று எனக்கு உங்களை அதிகமாய் பிடிக்கிறது. ஒருவேளை நாளை என் வாழ்வில் வரும் புது உறவுகளினால், நான் இன்று உங்கள் மீது வைத்திருக்கும் அன்பு குறைந்து விடுமோ என்று எனக்கு பயம் ஒன்றும் இல்லை. நாம் நல்லவனாய் வாழ, யாரிடமும் அனுமதி வாங்க அவசியம் இல்லை.நாம் நாமாக வாழவும் தான்.அது நம் கையில் தான் உள்ளது.
என் விந்திட்ட விதையாய் நாளை ஒரு குழந்தை என்னை அப்பா என்று அழைக்கும் போதும் நீங்கள் என்னை ராஜுப்பா என்று அழைத்தது தான் எனக்கு ஞாபகம் வரும்.அவனுக்கு என் மொத்த அன்பையும் கொடுப்பதாய் யோசனை இல்லை.அன்பு ஒன்றே மனிதனால் அளவின்றி கொடுக்க முடிந்த பொருள். என் மொத்த அன்பும் உங்கள் அனைவருக்கும் சேர்த்தே கொடுக்கப்படும்.பிரித்து கொடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
தர்ஷி,நீ பிறந்த போது உன்னை வரவேற்க என்னிடம் இரண்டு கைகளே இருந்தன.தீக்ஷி பிறக்கையில், உன் கைகளும் சேர்த்து நான்கு கைகள் தங்கையை வரவேற்க.நாளை நம் ஆறு கைகளும் சேர்ந்து கோகுல் சித்தப்பாவின் குழந்தையை ஏந்தும்.கவலை வேண்டாம் யாருக்கும்.
சில நாட்கள் முன் வீட்டில் இருந்து சென்னைக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலையில், வெளியே வரும் போது, பிரிவையும் பரிவையும் உள்ளுக்குள் அடக்கி உங்களுக்கு டாட்டா சொல்லிவிட்டு வரும்போது வலித்தது.என்னையே பார்த்துகொண்டிருந்த உங்கள் தாத்தாவின் கண்களில் அதே பிரிவும் பரிவும் ஒளித்து வைக்கபட்டிருந்ததை நான் புரிந்து கொண்டேன்.மூன்று வயதோட மட்டும் அல்ல உங்களுக்கு முப்பது வயது ஆகும் போதும் உங்கள் மேல் என் தந்தையை போல் எனக்கும் இதே பாசம் தொடர வேண்டும்.தொடரும்.
" கூட்டுக் குடும்பத்தில் வளரும் குழந்தைகள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள் " என்ற வாக்கியம் இப்போது தான் எனக்கு புரிய ஆரம்பிக்கிறது.உங்களை நான்கு விரல்கள் அடிக்க முற்படும் போது அதை தடுக்க எட்டு கைகள் வரும். உங்களுக்கு பிடித்தவைகளை செய்ய ஒருவரிடமும் , அவர்களுக்கு பிடித்தது போல் ஒருவரிடமும் நீங்கள் நடந்து கொள்ள முடியும். ஒரு சமன்பட்ட வாழ்க்கைக்கான பல வாய்ப்புகள் நம் வீட்டுக்குள்ளே உங்களுக்கு கிடைக்கும்.
தமிழும் கற்கலாம், ஆங்கிலமும் கற்று கொடுக்கலாம்.எதையும் தயங்காமல் அப்பாவிடம் கேள்,
அவர் இல்லையென்று சொல்ல மாட்டார் என்று சொல்லவும் ஆள் இருக்கும். அப்பா இல்லை என்று சொல்ல முடியாததை மட்டும் கேட்க பழகு செல்லமே என்றும் உங்களுக்கு சொல்லி தரவும் மனிதர்கள் உண்டு. சர்ச் போகவும் முடியும்,
பிள்ளையாருக்கு டாட்டாவும் சொல்லலாம்.
சமீப நாட்களாய் நீங்கள் அதிகமாய் எங்களை பின்பற்ற ஆரம்பித்து இருக்கிறீர்கள்.நாங்கள் செய்பவைகளை திரும்ப செய்யும் முயற்சி உங்களிடம் தெரிகிறது.வீட்டின்
வெளியே செருப்பை கழட்டி விட்டு உள்ளே வருவது போல, சமீப காலங்களாய் என்னுடைய அயோக்கியத்தனங்களை வெளியில் இறக்கி வைத்து விட்டு வருகிறேன்.எல்லா குழந்தைகளுக்கும் தங்கள் தகப்பன்கள் தான் முதல் கதாநாயகர்கள்.கூட்டு குடும்பத்தில் நிறைய நாயகன்-நாயகிகள். எனக்கு பிடித்த பாட்டை கூட உங்கள் முன் பாட யோசிக்கிறேன் இப்போது. "காசு,பணம்,துட்டு,money,money" என்ற பாட்டை தர்ஷிமா "காசே, துட்டே,money " என்று பாடுகிறாய்.
இரண்டு அபிப்ராயங்களை உங்களுக்கு சொல்ல விருப்பப்படுகிறேன் .
இக்கடிதம் உங்களுக்கு புரிய வரும் காலத்தில்
"I love you. I miss you" என்ற வார்த்தைகள் உங்கள் சமூகத்தில் சரளமாய்,தாராளமாய் உபயோக படுத்தப்படும். எனினும் யாரிடம்,எத்தனை பேரிடம் அதை சொல்வதென்று நீங்கள் தான் முடிவு செய்வீர்கள். கொஞ்சம் தீர்க்கமாய் அதை முடிவு செய்வீர்கள் என்று நம்பிக்கை உண்டு.
எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு என்று சொல்லி கொள்பவன் , பெரும்பாலும் அவன் அவனாக இருக்கும் ஆடம்பர வாழ்க்கையை இழக்கிறான்.சமூக வலைதளங்களில் இருக்கும் நண்பர்கள் எண்ணிக்கை வைத்து உங்கள் நட்பு முடிவு செய்யப்பட்டு விடகூடாது.
விடாது, நம்புகிறேன்.
அன்பு தொடரும்..................

No comments:
Post a Comment