Friday, June 13, 2014

அவள்-இவள்

                                                             அவள்-இவள்

ஓட்டிப்  பிறக்கவில்லை
ஒரு தாய் வயிற்றிலுமில்லை
எட்டியும் எட்டாத
அன்பின் உச்சத்தில்
அவளும் இவளும்.

காந்த கருவிழி
"அவள்" தன் இருவிழி
அடாவடியாய் அன்பு பேசும்
கலாட்டாவின் காதலி அவள்
"கொஞ்சமாய் குட்டியாய்"
குழந்தை மொழி சொல்வாள்.

மழலை மொழி மறவா
குழந்தை வழி "இவள்"
சிரிப்பில் சிறைபடுத்தும்
' நாட்டிய ' சூறாவளி
பிறர் மனம் வருத்தாத
வார்த்தை ஜால வித்தகி.

அதிசயமே! அதிசயமே!
துறைமுகத்து  (தூத்துக்குடி)
கப்பல் ஓன்று
தெருவோரம்  ( தெரு??? )
தரை தட்டியது
அதிசயமே!

காலம் கைகோர்க்க
பள்ளிக்கூடம் ( ??) பாதை போட
அதிரடியாய்
அவளின் பிரியம்
அணுவணுவாய்
இவளை ஈர்க்க

நிழல் கலைந்து
நிஜம் உடுத்தும்
"குழந்தையும்  சிரிப்புமாய் "
அவளும் இவளும்.

பக்கம் பக்கமாய் இருவருக்கும்
வந்து சேர்ந்த காதல் கடிதம்
கற்பனையிலும் காட்டாத
காதலின் வீரியம்
பக்குவமாய்
இவள் சொன்னாள்

"ஆணாய் அவள் இருந்தால்
அவளே  (என்) அவர் "

ஓட்டிப்  பிறக்கவில்லை
ஒரு தாய் வயிற்றிலுமில்லை
எட்டியும் எட்டாத
அன்பின் உச்சத்தில்
என்
இரட்டை சகோதரிகள்.                                                             

No comments:

Post a Comment

அன்பின் அம்மா

பூட்டிக்கிடக்கும் நம் வீடு, புடவைக் கட்டிய வயதான தாய்மார் கருப்பு மையிடாத அப்பாவின் தலைமுடி , 'அப்பம்மா பார்க்கிறாங்க' என்கிற மகள் ...