என் தந்தை விந்திட்ட,
எனக்கு முன்னரே
மண் பார்த்த
மூத்த விதைகள்
என் தாயின்
தொப்புள் கொடியின்
முதல் வரிசை மலர்கள்
பத்து மாதம் வாடகையின்றி
நான் இருந்த வீட்டின்
மூத்த குடிகள்
தாய்ப்பாலை நானும் குடிக்க
மிச்சம் வைத்த நல்லவர்கள்
பண்டம் தின்ன
சண்டை வந்தாலும்
கடைக்குட்டி என் பங்கை
குறைக்க முயலாதவர்கள்
முடியாதவர்கள்
நண்பர்கள் நான் தேட
வாய்ப்பு தராத நண்பர்கள்
அண்ணன் என்று நான்
அழைக்காத போதும்
நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை தன்னை போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை தம்பி உந்தன் உள்ளம்தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை ஒன்றை காணும் வானம் என்றும் ரெண்டை மாற ந்யாயம் இல்லை கண்ணோடுதான் உன் வண்ணம் நெஞ்சோடுதான் உன் எண்ணம் முன்னேறு நீ மென்மேலும் என்னாசிகள் கை கூடும் இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க
ReplyDeletenandri smap
ReplyDelete