என் காதல் என் காதல்
என்றே நான் சொன்னாலும்அது நம் காதல் தானே
நண்பா.
நீ இல்லாமல்
எனக்கேது காதல்?
காதலியை மட்டுமல்ல
காதலையும் சேர்த்தே
எனக்கு அறிமுகம் செய்தவன்
நீதானே?
"கிட்டத்து பார்வை" பாவை அவள்,
முதல் பெஞ்சின் நெருங்கிய தோழி.
எங்கோ தூரத்தில் "மாப்பிளை பெஞ்சில்"
உன்னோடு நான்.
திரும்பும் அவள்
தன் தோளைப் பார்த்தாலும்
தோழியைப் பார்த்தாலும்
அவள் தன் கூந்தலின்
பொடுகையே பார்த்தாலும்
"மச்சான்,உன்ன பார்க்றாடா அவ"
என்று அசராமல் சொல்வாயே.
பொய்யாக இருந்தாலும்
சௌகர்யமாய் இருந்தது
பிடிக்கவும் செய்ததே.
என்னிடம் அவள் பேசும்போது
வெட்கப்பட்டாள் என்றாய்.
"நாணம் பெண்ணின் முதல் மொழி" என்று
நீ கவிஞன் ஆனாய்.
நான் அவள் ரசிகன் ஆனேன்.
"உன்ன follow பண்றா மச்சா"
நீ சொன்ன போது
தெரியாமல் போனதே
நான் நின்றது
வகுப்பறை வாசல் என்று.
என் காதல் என் காதல்
என்றே நான் சொன்னாலும்அது நம் காதல் தானே
நண்பா.
நீ இல்லாமல்
எனக்கேது காதல்?
ஓரிரு நாட்கள்
ஒரே நிறத்தில்
அவளும் உடை அணிய
"சத்தியமா சொல்றேன்,தெய்வீக காதல்"என்றாய்.
காற்றில் மிதந்தேன்ஆக்சிஜன் குறைவதும் புரியாமல்.
அவளின் முகம்
என் கணினியின் முகமாக்கி
"Romantic Look da"
நீ தான் சொன்னாய்.
முழித்திருக்க கூடாதா?முட்டாள் நான்.
சரி,தெளிவான அறிகுறிகள்,
இது தான் காதல் என்றுஅவளிடம் சொன்ன போது
எது தான் காதலென்று
அவளும் சொல்லவில்லை
இருந்தாலும்
கேவலமாய் சொன்னாளேஅதுக்கூட மறந்ததடா
"மச்சான்,
Shift + Del, சிம்பிள்டா"
நீ சொன்னது மறக்காது.
என் காதல் என் காதல்
என்றே நான் சொன்னாலும்அது நம் காதல் தானே
நண்பா.
நீ இல்லாமல்
எனக்கேது காதல்?
Could not retain the flow,continuity and creativity while writing this post.
ReplyDeleteFailure attempt in writing about Kaathal.
Killadi paya puula dae nee....enga irunthu thaan evvalavu arivooo unaku....
ReplyDeleteஎன் காதல் என் காதல்
Deleteஎன்றே நான் சொன்னாலும்
அது உன் காதல் தானே
அண்ணா.
எனக்கேது தனியாய் காதல்?