Sunday, September 1, 2013

மகளே ! மதியே !

                                         மகள் 

மகளே ! மதியே !

பாசம் பேசும், வாசம் வீசும்
மழலையே !


மோசம் போகும் நாச உலகின்
எந்தன்
 பிழை திருத்தமே !

***********************************************************************

மகளே ! மதியே !

வேடம் ஏற்று,வெளியில் செல்வேன்
உன்னிடம்  மட்டும்,வேடம் கலைவேன்


வேதம் நான்கும்  சொல்பவை  அறியேன்
உந்தன்  சொற்கள் -மறக்கவும் அறியேன்

***********************************************************************

மகளே ! மதியே !

நாட்கள் செல்ல
நீயோ வளர்கிறாய்
நானோ  தவிழ்கிறேன்.

*******************************************************************
மகளே ! மதியே !
 
உன்முன் -தோற்க தயாரில்லை
உன்னிடம்-தோற்க தயக்கமில்லை


No comments:

Post a Comment

அன்பின் அம்மா

பூட்டிக்கிடக்கும் நம் வீடு, புடவைக் கட்டிய வயதான தாய்மார் கருப்பு மையிடாத அப்பாவின் தலைமுடி , 'அப்பம்மா பார்க்கிறாங்க' என்கிற மகள் ...