Saturday, September 7, 2013

கடவுளுக்கு

அன்புசார் கடவுளுக்கு,
                         
                                      நான் இங்கு நலம். பீகாரில் புத்த-கயாவிலும், இஸ்ரேலிலும்,கேதர்நாத்திலும்  உங்கள் நலமின்மை குறித்து ஊடகங்களில் வரும் செய்திகள் கண்டு, மனம் வருந்தி, உங்கள் நலம் வேண்டி,நீங்கள்  நலம் பெறுவீர் என்ற  நம்பிக்கையுடன்  உங்களுக்கே இக்கடிதம் எழுதிகிறேன்.

                                      கடிதம் எழுதுவது முடிவாயிற்று. நீங்கள் படைத்த தாய்-தகப்பன் இல்லாத குழந்தைகளை இச்சமூகம் விலாசம் இல்லாதவன் என்று அழைப்பது போல விலாசம் இல்லா உங்களுக்கு, எப்படி கடிதம் எழுத? எழுதினாலும், அவை  யாரிடம் பொய் சேரும்? யார் சேர்ப்பார்? என்ற கேள்விகளுக்கான பதில் நான் தேட முனைவது இல்லை. பெரும்பாலும் திரும்ப பதில் எழுத முடியாதவர்களுக்கோ  இல்லை திரும்ப பதில் சொல்ல விரும்பாதவர்களுக்கு மட்டுமே நான் இது வரையில் கடிதம் எழுதி இருக்கிறேன் .

                                       அவை, ஓன்று என் மகளுக்கான கடிதம் மற்றவை மக்களாட்சி முறையில் அமைக்க பெற்ற அரசாங்கத்திற்கான  கடிதம்.நான் எழுதும் மொழியை இது வரையில் புரிந்து கொள்ள முடியாததால் என் மகள் பதில் சொல்ல வில்லை. பதில் சொல்ல முடியாத அளவுக்கு நிறைய கேள்விகள் அரசாங்கத்திடம் அதிகம் மக்களால் கேட்கபடுவதால், பெரும்பாலும் அவர்களும் பதில் சொல்வதில்லை.எனவே பதில் எதிர்பார்த்து நான் இக்கடிதம் ஏற்றவில்லை.

                                    எனினும்,பதில் தருவதாய் நீங்கள்  முடிவு செய்தால் எந்த மொழியுலும் பதில் தரலாம்.  இந்தியாவில் இருக்கும் ஏசுவிற்கு தமிழ் தெரிந்திருக்கிறது , அவர் ஆப்பிரிக்க மொழியும் பேசுவதாய் நான் அறிகிறேன். சிவனும் நேபாள மொழியும் படித்திருக்கிறார் நாகா மொழியும் புரிந்துகொள்கிறார்.புத்தர் ஆசிய மொழிகள் பலவற்றை பேசுகிறார் போலும்.எனவே  உங்கள் பன் மொழி புலமை  போல, பூலோகத்தில் என் சக மனிதன் கண்டுபிடித்த மொழிபெயர்ப்பு மென்பொருள்கள் எனக்கு தகுந்த உதவி தரும்.எனவே செம்மொழி  தமிழில் தான் நீர் பதில் தர வேண்டிய அவசியமும் இல்லை.

                                 நேற்று என் வீட்டின் அருகில் இருக்கும் ஒரு கோவிலில் உனக்கு டாட்டா சொல்லிவிட்டு, நீ திரும்ப சொல்லாததால் என் மகள் உன் மேல் கோபத்துடன் இருக்கிறாள். மேலும் தப்பு செய்தால் இறைவன் தண்டனை தருவார் என்று சொன்ன என்னிடம் "அப்போம், இந்த DEER-ஆ அடிச்சு, சாப்பிட்ட LION-க்கு இன்னும் ஏன் Punish தரல? " என்று Discovery Satellite Channel பார்த்து விட்டு அவள் கேட்கிறாள். பதில் நீயும் சொல்வதாய்  இல்லை நானும் சொல்லவில்லை.

                                   அவளுக்கு எழும் கேள்விகள் போல எனக்கும் சில கேள்விகள் அவ்வபோது எழுகிறது.முடிந்தால் கேள்விகளையாவது மட்டும் படியும்.

                              சமீபத்தில் தர்மபுரியில் வெவ்வேறு சாதியை சார்ந்த இருவர் திருமணம் செய்ததால் , அங்கே அரங்கேறிய அடக்கு முறை அட்டூழியங்களை உனக்கு உன் உளவு துறை அறிக்கையாக , அது நடக்கும் முன்னரே ஏன் தரவில்லை? அவ்வாறு தந்திருந்தால் உன்னால் அந்த தவறு நடக்க முடியாது செய்திருக்க முடியுமே? கேதர்நாத்தில் அரங்கேறிய இயற்க்கை சீற்றங்களின் நடுவே நீ மட்டும் உன்னை பிழைக்க வைத்து உன் சக்தியை வெளிப்படுத்தி , உன் பக்திமான்களையும் கவர்ந்திருக்கறாயே ,அது போல ஏதாவது திருவிளையாடலா இது ? நீ உன் சக்தியை பூலோக மனிதர்களும்,அடுத்த மதத்தை சார்ந்த  உன் போட்டி கடவுள்களும் புரிய வைக்க , ஏதோ திருவிளையாடல்-II பாகம்  விளையாடுகிறாயா?

                             

                           


                                    

No comments:

Post a Comment

அன்பின் அம்மா

பூட்டிக்கிடக்கும் நம் வீடு, புடவைக் கட்டிய வயதான தாய்மார் கருப்பு மையிடாத அப்பாவின் தலைமுடி , 'அப்பம்மா பார்க்கிறாங்க' என்கிற மகள் ...