Thursday, November 10, 2011

torture transport system

Sun Pictures படம் எடுக்கிறது வரைக்கும் எந்த படம் பார்க்கலாம் கூடாதுன்றது ஒரு சிலருக்கு choicea  இருந்தது. SP தான் வீட்டுல இருக்கிற எல்லோரும் படம் பார்கிற வரைக்கும் advertisement போட்டு torture பண்ண ஆரம்பிச்சாங்க. ஆனா SP முன்னாடியே இந்த கொடுமை Long Distance Bus travel பண்றவங்க face பண்ணிருப்பாங்க.   

உலகத்திலே மிக பெரிய தண்டனை நாம பார்க்க கூடாதுன்னு நினைக்கிற படத்த மறுபடியும் மறுபடியும் பார்க்க வைக்கிறது தான்.நான் எந்த படங்கள் பார்க்க கூடாதுன்னு நினைக்றேனோ அதெல்லாம் கொய்யால பஸ்ல போட்டுடுவானுங்க. 

அசல்,திருப்பாச்சி,சிவகாசி,நெறஞ்ச மனசு, சொக்க தங்கம் இன்னும் எத்தனையோ..govt busla speaker system மொக்கையா வேற இருக்கும். கொய்யால கண்ண மூடிட்டு இருந்தாலும் காதுல கீச் கீச்னு torture பண்ணிடுவாங்க..

சொக்க தங்கம் மட்டும் என்ன 15 முறை மேல SETC/TNSTC/private bus operatorsnu ரவுண்டு  கட்டி அடிச்சானுங்க....அந்த படத்தோட background music ?????எப்பா சாமி .......theater operator கூட அவ்ளோ முறை பார்த்துருக்க மாட்டங்க ....மிக பெரிய தியாகி நான் அந்த வகைல ..

நல்ல வேளை இப்போலாம் 2 மாசம் முன்னாடியே  online train ticket book பண்ணி escape ஆயிடறேன்.... 

Tuesday, November 8, 2011

ஊழலும் அரசு ஊழியர்களும்

"Expecting a govt.official not to be bribed is expecting a person having honey in his tongue not to taste it."

"To find whether a govt.official is corrupt is to find whether fish in water is drinking water or not"

-------------Chanakya, around 2400 years back         

Saturday, August 13, 2011

வறுமை

உண்ணாவிரதம் உடலுக்கு  நல்லது - 
செய்தித்தாள்  படிக்கிறாள் மாடி வீட்டு சிறுமி .....
நான் தினமும் இருக்கிறேன் -
இது தாள் பொறுக்கும் சிறுமி





Sunday, August 7, 2011

He has different abilities; am disabled

சின்ன பசங்க மூலமா நமக்கு message சொல்றது படங்கள் மட்டும்(கன்னத்தில் முத்தம்மிட்டால் படம்   ) இல்ல ....நம்மள சுத்தி இருக்கிறவங்களே சொல்லலாம்னு நேற்று தெரிஞ்சிகிட்டேன்.

எங்க apartmentla  இருக்கிற பையன் 11 வயசு .தான் செய்யாத தவறுக்கான தண்டனைய அனுபவிக்ற கட்டாயம் அவனுக்கும்.குறை மாசத்தில பிறந்ததா சொல்லுவாங்க..அவன் கால்கள் வலு இல்லாம்ம இருக்கும்..

 வீட்டுக்கு உள்ளையே அடைஞ்சு இருக்ற வேண்டிய கட்டாயத்தால அவன் வயசுக்கு ஏத்த maturityum கம்மியா இருக்ற மாத்ரி எனக்கு தோணும் ....தன்னோட பழகுறதுக்கு தனக்கு பிடிச்ச மாதரியா , தன்ன புரிஞ்ச மாதரியா யாரும் இல்லையே அப்படின்றதும் அவன் problem...

தன்னோட வயச 11yrs சொல்ற அவன் ,2011 கும் 2000 கும் உள்ள difference தான் இந்த 11 yrs nu  சொல்ல மாட்டான்.2000 ல பிறந்தா இப்போ எனக்கு என்ன வயசுன்னு கேட்பான்.English Alphabetsa இன்னும் rhymes மாதரியே சொல்லுவான்.ABCD ...EFG...HIJK.......

நேற்று பேசிட்டு இருக்கறப்ப "Daily prayerla என்னடா வேண்டுவனு கேட்டேன் "...

"சீக்கிரம் நடக்கனும்னு வேண்டுவேன் .."
"சீக்கிரம் College போகணும்னு வேண்டுவேன்"
"இந்தியாவில் இருக்கிற மக்கள் எல்லாம் மன அமைதியோட நிம்மதியா சந்தோசமா வாழணும்னு வேண்டுவேன் ".......

சொன்னான் ...அதோட நிறுத்திட்டேன் ....

அவனுக்கு யாரு இது சொல்லி கொடுத்ருபாங்கனு எல்லாம் தெரியல...இதையே சினிமாவில எடுத்திருந்தால் இந்த scenela அவன்  என்னோட "கன்னத்தில் பளார் பளார்னு " அவன் அறையுறது மாதிரி எடுக்க வேண்டியது தான்...படத்தோட பேரு "கன்னத்தில் பளார்விட்டால் "........

Sunday, July 31, 2011

என் பேரு இவளவு அழகா??????

என் பேரு இவளவு அழகா கூப்பிட முடியும்னு இன்னைக்கு தான் தெரிஞ்சிகிட்டேன்.அந்த அழக ரசிக்றதுக்கு கால் நூற்றாண்டு ஆகிருக்குது. அவள முதல் முறை பார்க்றப்பவே decide பண்ணியாச்சு. இவ தான்னு.ஆனா இப்போ தான் அவ என்ன நம்பலாம், Worth தான்ற அளவுக்கு develop ஆகிருக்கா.இல்லைனா என் பெயர மட்டும் சொல்ல மாட்டா இல்ல.

இருந்தாலும் மொழி என்னோட வாழ்க்கையில் அரசியல் பண்ணுது .அவ பேசற மொழி எனக்கு தெரியாது.நான் பேசற மொழி அவளுக்கு புரியாது.அவ பேசற மொழிய நான் பேச இந்த சமுகம் ஒத்துக்கவும் செய்யாது. ஆண் ஆதிக்க சமுதாயம் இல்ல.?  இல்ல.
மொழி தமிழ்நாட்டு அரசியல மட்டும் இல்ல என் வாழ்க்கையுலும் விளையாடுது.

பெயர சொல்ற அளவுக்கு develop ஆகிருக்ற அவ நிச்சயம் என்னோட அன்பையும் புரிஞ்சிப்பா.It would certainly take some time. I would ensure that she says " I love you.I love you more than I love my father".ஆனா அதுக்கு நெறைய competition இருக்கும்.என்னோட அண்ணன் , என் அப்பா,என் அம்மா ,அவளோட அப்பாவான என்னோட மூத்த அண்ணன் இவங்க  எல்லோரையும் தாண்டி நான் அவ மேல அன்பு காட்டணும்.அத அவ புரிஞ்சக்கணும்.

However I am so happy that my 18 months old niece calls me by name in her style"Ajeeeeeeeeev".Thank you so much குட்டிமா.








Sunday, November 29, 2009

சத்தியமா நான் englishla எழுத மாட்டேன்

" நமக்கு என்ன வருமோ அத மட்டும் செய்யணும் ....நீ எல்லாம் action sequence பண்றது மாதிரி எதிர்பார்க்கலாமா....உன் பாடிக்கு அது வொத்து வரும்மா ...."
படிக்காதவன் படத்துல மயில்சாமி தனுஷ்ட சொல்றது மாதிரி வந்த dialogue இது...

கீழ இருக்கிற e-mail final yearla department group e-mail idku நான் அனுப்பினது...எதோ ஒரு e-mail தேடிட்டு இருக்கறப்ப இந்த e-mail கண்ணுல பட்டது .....இத படிச்சதுக்க அப்புறம் தான் நான் முடிவு பண்ணினேன் .....englishla blogla எதுவும் எழுத கூடாதுன்னு.ஆனா வெளில பேஸ்ரச்ச நமக்கு ஏதோ தமிழ் ஆர்வம் அதிகமா இருக்ற மாத்ரி தான் பேசனும்....

ஒரு எழுத்து கூட edit பண்ணாம அந்த e-mail ........இத இப்போ படிக்கறச்ச comedya இருக்கு


SHARE OUR FEELINGS???????
_________________________
hi everyone,
a special hi 2 those who delete mails jusy by seein the name of the sender.if u can spend a minute r more in readin this continue else do as u do usually.
the no of days we r goin 2 meet each other is being counted.atleast now i feel of sharin something.........
in the 1st sem when Dsection mates were asked to write abt their friends by the then student councillor i was written as very quiet & a PEACE MAKER.i was sayin to
myself eppadi iruntha naan eppadi ayyitaen.since i know i used to talk much but not with everyone.here too i had talked ........
if it had become mandatory that i should continue in Dsection i would hav quit SSN and chennai.but it was the gents hostel and eeeb that made me stick to ssn. i dont know whether i had adapted to the environment of eeeb r it was the same i did expect.any way thanks to eeeb both boys and girls.dont wonder ENNA THIDIR PANIVU(OBEDIENCE)?
i dont believe in crying for our seperation r signin in the autograph sayin AENDRUM MARAVA NANBAN at the last moment after this 4 years of our course.i believe wat is that i am goin to get after the end of my college life is not goin to b as joyful as the life in college eventhough people say the end of onethg leads to the beginning of a better thing.
a single incident r a moment is strong enough to bring back the pleasure in our heart if we think abt the college life in the future. so if we hav such an incident we can share that at this moment.the incident need not be the happiest moments it can b anythg say an unidentified mistake,unexpressed love ,incidents like bein punished by the staff etc.(i had experienced only these )..........there r incidents wen i had committed mistakes and my EGO prevented me from saying SORRY to the concerned...it can b like that also.if u feel freeeeeeeeeee i too will ..........
finala oru dialogue
nanban/aethiri, pidichavaen/pidikathavaen ,aan/pen yaaru aengae aeppo sonnalum athu ounmaiyana follow pannunga .athu thappae illai..................

கனவு

" சுற்றும் விழி சுடரே சுற்றும் விழி சுடரே......... "பாட்டு நான் பாடலிங்க என்னோட mobile phone பாடிச்சு ..

யாருடா காலைலியே call பண்ணி எழுப்பி விடறது ? "HELLO" .... "hello" சொல்லுடா மச்சி ......மச்சான் தூங்கிட்டு இருந்தியாடா.......****** இல்லடா குளிச்சிட்டு இருந்தேன்.ஏன்டா விடியிற முன்னாடியே எழுப்பி விடுற? என்னடா matter சொல்லுடா? .....ஒன்னும் இல்ல மாமா time 9 ஆய்டுச்சி .....அத சொல்ல தான் call பன்னுனியாடா ?டைம் பீசே அதே சொல்லுமடா?மொக்க போடாத phonea வைடா .......டேய் லூசு ரொம்ப ஓவரா பேசாத.காலைல 6 மணில இருந்தே உனக்கு call பண்ணிட்டு இருக்கறேன் .இன்னைக்கு Pongal train ticket reservation start ஆகிடுச்சி.வழக்கம் போல இந்த முறையும் நீ busla தான் ஊருக்கு போக போற.......
***** வட போச்சே.மச்சி விடுடா நான் பாத்துக்கறேன்.அப்புறம் பேசலாம். good night மச்சி......

எவன்டா 90 நாளுக்க முன்னாடி reservation start பண்ணுனான். இந்த software companyla work பண்றவன்லாம் reminder வச்சி internetla இருக்கிற எடத்தில இருந்தே ticketa போட்ட்ராணுக......8 மணிக்கு ஆரம்பிக்குற reservation 8.30 கு முடிஞ்சிட்றது . சாதாரன மக்கள் எல்லாம் train ticket போடறதுக்குள்ள queuela நின்னு ஏமாந்து தான் போறாங்க..கொய்யால நான் மட்டும் railway minister ஆனேன் software engineersa trainla travel பண்ண விட மாட்டேன்..

bedsheeta இழுத்து போர்த்திட்டு மறுபடியும் தூங்க போயுட்டேன்..ஏன்னா தூங்குனா தான் abdul kalam அடிக்கடி சொல்ற கனவு வரும்.கனவு வந்தா தான் நான் Railway minister ஆக முடியும் .

பூவே எனக்காக

சுகமாகத்தான் இருந்தேன்
என்னடி சூழ்ச்சி செய்தாய்
சுற்றும் உன் விழியில் எனை வீழ்த்த
காந்த சக்தி கலாமே கற்று கொடுத்தாலும்
உணர்ந்திருக்க மாட்டேன் ..
உன் கண்களில் கண்டுகொண்டேன்
காந்தமடி உன் கண்கள்
தூக்கத்தை பறித்து துக்கத்தை தந்தவளே
பூ தன் வாசம் அறியாது
செடி பூவை கொண்டாடாது
பூவின் புனிதம் அது சேரும் இடம்
உனக்கு புரிந்திருந்தால்
அது போதும்

Tuesday, June 2, 2009

அன்னையர் தினம்

அடுத்த தலைமுறை ஆனந்தமாய்க் கொண்டாடும்
அமெரிக்காவிலிருந்து வாழ்த்துக்கள் சொல்லும்
முதியோர் இல்லங்களில் " Get Together"கள் கூடும் .

நண்பா

இதை தான் சாப்பிடனும்- அம்மா தீர்மானித்தாள்
இது தான் சீருடை - பள்ளிக்கூடம் பணித்தது
இந்தக் கல்லூரி  தான் உனக்கு-அப்பா அறிவுறுத்தினார்
இவர்கள் தான் கடவுள்-சமூகம் நிர்பந்திக்கிறது
சிந்திக்கிறேன் .....
எதை நானே முடிவு செய்தேன்?
நினைவில் வந்தது நீ .


Monday, June 1, 2009

கறுப்பு- உன் இதயம்

அன்று
கறுப்பு உனக்கு பிடிக்கும் என்றாய் ...
என் வீட்டு வெள்ளை நாய்க்குட்டியை
"Blacky" என்ற பெயரில் அழைக்கிறேன்
காகத்தின் குரல் கீதம் என்கிறேன்
கமல் அஜித் படங்களை விட
ரஜினி விஷால் படங்களையே பார்க்கிறேன்
கறுப்பு சட்டை அணிந்து நடக்கிறேன்
சபரி மலை தொடர்ந்து செல்கிறேன்
அமெரிக்காவின் சிறந்த அதிபர்
Barack Obama என்கிறேன் ...
ஆனால்
இன்று தான் தெரிந்தது
எல்லா நிறங்களையும் உள்ளடக்கி
எதையும் பிரதிபலிக்காத நிறம் கறுப்பு என்று
எல்லா உணர்வுகள் இருந்த போதும்
காதலை வெளிப்படுத்தாத உன் இதயம் போல

அன்பின் அம்மா

பூட்டிக்கிடக்கும் நம் வீடு, புடவைக் கட்டிய வயதான தாய்மார் கருப்பு மையிடாத அப்பாவின் தலைமுடி , 'அப்பம்மா பார்க்கிறாங்க' என்கிற மகள் ...