Thursday, July 12, 2012

பலாபழம் பாழாக்கும்


எங்க பெரியம்மா அப்பவே சொன்னாங்க "தம்பி,ரெண்டு ரூபா கொடுத்துட்டு போணு ",அவுங்க சொன்னத ஒழுங்கா கேட்டுருந்தா சண்டையே வந்துருக்காது .

" வீட்ட கட்டிப்பார் கல்யாணம் செஞ்சிபார்னு " ஊர்ல இப்போவும் மக்கள் சொல்வாங்க.ரெண்டுலயும் இருக்கிற கஷ்டத்த பத்தி இதுல சொல்ல முயற்சி செஞ்சிருப்பாங்கன்னு  நினைக்றேன்.இருந்தாலும் இப்போ பெரும்பாலும் ரெண்டையுமே மக்கள் சிரமம் இல்லாம செய்ய ஆரம்பிசிட்டாங்க.

Building contract,Labour Contract,Material contract அப்படின்னு Outsourcing Concept  நமக்கே தெரியாம நாமளே promote பண்றோம்.இருந்தாலும்  நடுத்தட்டு வர்க்கத்து மக்கள்கிட்ட "Building Outsourcing" போய் சேர்ந்தது  மாதிரி கல்யாண Contract போய் சேர்ந்திடல.குறைந்தபட்சம்  எங்க ஊர்ல மக்களுக்கு இந்த கல்யாண Contract மீது அவளவு ஈடுபாடு இல்லனு சொல்ல முடியும்.

இப்போவும் நம்ம ஊர்ல மக்கள் கல்யாணம்னா குறஞ்சது ஒரு மாசத்திற்கு முன்னாடியே ஒரு படபடப்போட அதற்கான வேலைய செய்றாங்க.எங்க வீட்ல சமீபத்துல நடந்த திருமண விழாவோட அனுபவம் இது.நம்ம படபடக்றோமோ இல்லையோ கூட இருக்கிற சொந்தங்கள் டென்ஷன் படுத்திடுறாங்க.

நம்ம நாட்ல கிட்டத்தட்ட அறுபது சதவித மக்கள் விவசாயம் செஞ்சாலும் ஒரு Software Engineer பொறுத்த வரைக்கும் Software Engineers தான் அதிகமா இருப்பாங்கனு சொல்வான்.அந்த அளவுக்கு இப்போ SW Engrs நாட்ல அதிகம் ஆகிட்டதா ஒரு பிரம்ம.White Collared Job னுறது எல்லாம் SW Engr Jobஆ பார்க்கபடுது.

.Auto டிரைவர்ல இருந்து Apartment Owner வரைக்கும் SW Engrs பேர சொல்லியே விலை ஏத்திட்டாங்க.SW Engrs சிரமம் இல்லாம புக் பண்ணிடுராங்கன்னு சொல்லி அரசாங்கமே Railway Tatkal Reservation System மாத்திருக்காங்க. SW Engr மாப்பிள்ள தான் வேணும்ன்ற காலம் போய் "SW Engrs, Please  Excuse" காலம் பத்து வருஷத்துக்குள்ளே வந்துடுச்சு.அது வேற பிரச்சன.

கல்யாணத்த பொறுத்த வரைக்கும் பெரிய வேலை என்னன்னு என்ன கேட்டா "திருமண அழைப்பிதழ்" கொடுக்கறதுன்னு சொல்வேன்.மேல்தட்டு சமூகத்திலும் நம்ம மாமா SW Engrs கலாச்சாரத்திலும் இருக்கிற "e-mail Marriage
Invitation " concept நமக்கு வேலைக்கு ஆகாது.

Internet Access னறது நம்ம நாட்ட பொறுத்த வரைக்கும் ஒரு Luxury.6% மக்களுக்கு தான் அது கிடைக்கிறதா சொல்றாங்க.அதனால  எங்க சொந்தங்களுக்கோ ஊர்காரங்களுக்கோ இந்த மாத்ரி அனுப்ப முடியாது.

 இல்லைனா எல்லாருக்கும் ஒரு காசு செலவு இல்லாம "e-mail invitation" அனுப்பிட்டு இருந்தடலாம்.யாருக்காவது அனுப்ப மறந்துட்டா கூட மச்சான் அனுபிட்டேன்டா உனக்கு Delivery ஆகலையானு கேட்டுடலாம்.பத்திரிக்க அடிக்கிற செலவும் மிச்சம்.

வெளியூர்ல இருக்கிற சொந்தக்காரங்களுக்கு வேணும்னா Indian Post ல அனுப்பிட்டதா அடிச்சு விடலாம்."என்னங்க மாமா ,தபால் வந்து சேரலயானு ?" கேட்க முடியும்.தபால் துறை மந்திரி கபில்சிபிலுக்கே தெரியும் Post Man ஒழுங்கா Delivery பண்ண மாட்டார்னு.

போதாததுக்கு சொந்தக்காரங்க மரியாத வேற எதிர்பார்பாங்க.பொண்ணு மாப்பிள்ள பேர விட தன்னோட பேரு பத்திரிகையில இருக்குதான்னு பார்பாங்க.தனிப்பட்ட முறையில் போய் அவங்களுக்கு பத்திரிக்க கொடுக்கணும்.அதுலயும் ஒரு நல்லது இருக்கு.

நமக்கே தெரியாத நம்ம சொந்தபந்தங்கள,அவங்க வீட்ட நமக்கு நாமளே அறிமுகபடுத்திக்க வேண்டியது தான்.நேரம் இல்ல ,"Time Waste" னு சொல்ல முடியாது.

இப்படிதான் எங்க அம்மாவோட அம்மம்மாவோட சொந்ததில ஒரு வீட்டுக்கு பத்திரிக்க கொடுக்க போயிருந்தோம்.மிக பெரிய போராட்டதுக்கப்புறம் அவங்க வீட்ட கண்டுபிடிச்சி போனா அந்த வீட்ல ஒரு பாட்டியும் ஒரு அம்மாவும் இருந்தாங்கா.அந்த பாட்டிய எங்கம்மா எனக்கு பெரியம்மானும் அந்த அம்மாவ எனக்கு அக்காணும் அறிமுக படுத்தினாங்க.

கொஞ்ச நேர நல விசாரிப்புக்கு அப்புறம் எங்க அம்மாவும் அவுங்க அக்காவும் அரை மணிநேர FlashBack க்கு போய்ட்டாங்க.சினிமானா எந்திருச்சுபோய் ஒரு தம்மு போட்டுருக்கலாம்.இப்போ ஒன்னும் முடியல.அந்த பழைய வீட்டோட விட்டத்த அண்ணாந்து பார்த்துட்டே தூங்கிட்டேன் .

திடீர்னு எங்கம்மா ஒரு கோணி பையோட வெளில வந்தாங்க.எங்க பெரியம்மா என்ன எழுப்பி  "மக்ளே,ஒரு ரெண்டு ரூபா துட்டு  கொடுத்துட்டு போ மக்கான்னு "சொன்னாங்க.எங்கம்மாட்ட எதுக்குன்னு கேட்டதுக்கு அவங்க ரெண்டு பலாபழம் தந்ததா சொன்னாங்க.

பெரியம்மா சொன்னாங்க
"பலாபழம் சொந்தகாரங்களுக்கு கொடுத்தா 1 ரூபா வாங்கிடனும்.இல்லைனா குடும்பத்துக்குள்ள சண்ட வந்துடும்னு." ரெண்டு பலா பலத்துக்கு ரெண்டு ரூபானு எங்க பெரியம்மா தெளிவா சொல்லிட்டாங்க.

ஐயோ பெரியம்மா என்ன நீங்க பேசறீங்க அதெல்லாம் ஒன்னும் சண்ட வராது.நீங்க பழத்த கொடுங்க நான் கார்ல வச்சிட்ரேனு சொன்னேன்.அவங்க விடவே இல்ல.கண்டிப்பா வேணும்னு அடம் பிடிச்சாங்க.

எப்படியாவது அந்த இடத்திலிருந்து எஸ்கேப் ஆகிடுவோம்னு பர்சில காசு தேடினா சில்லற காசு கிடைக்கல.பத்து ரூபா நோட்ட அவங்ககிட்ட கொடுத்தா அவங்க "யாம்ல,உனக்கு சொன்னா தெரியாதா ?ரெண்டு ரூபா கேட்டா பத்து ரூவா தாள தர.பலா பழத்தால எத்தன குடும்பம் பாழா போயிருக்கு தெரியுமான்னு" வரலாறு பேச ஆரம்பிசிட்டாங்க.
"பக்கத்துல பெட்டிகட இருக்கு,அதுல போய் ஒரு புளிப்பு முட்டாய் வாங்கிட்டு வந்து சில்லறய தானு" order போட்டாங்க.அவங்களுக்கு எப்படி புரிய வைக்கலாம்னு யோசிச்சிட்டே இருந்தா,

நடுவில எங்கிருந்து தான் வந்தாங்களோ அரண்மனை கிளி படத்துல வர ராஜ்கிரனோட ஆத்தா மாத்ரி ஒரு தாய் கிழவி ஓடி வந்து
"ஏண்டி,உன்னோட சொக்காருனுங்க தான் உன்ன மதிக்கறது இல்ல தெரியும்ல .பாரு நீ சொல்றத அந்த பொடிப்பையன் கேக்குறானா .
நீ ஏண்டி அவனுகளுக்கு என் வீட்டு சக்கபழத்த கொடுக்றனு "  பெரியம்மாவோட குடிமிய பிடிச்சாங்க.

என் கையில இருந்த ரூபாவ பிடுங்கிட்டு எங்கம்மா சட்டுன்னு போய் புளிப்பு மிட்டாய் வாங்கிட்டு அவங்ககிட்ட 2 ரூபா துட்டையும்  கொடுத்தாங்க.
"கொஞ்ச நேரத்தில சக்கபழம் அது வேலைய காமிச்சிட்டு பார்த்தியான்னு"
'அரண்மனை கிளி ஆத்தா' சொன்னாங்க.அவுங்க வீட்ட விட்டு வந்துட்டோம்.

நான் ஒரு முட்டாள்,விஞ்ஞானமே தெரியாம இருக்றேன்.
எங்க பெரியம்மா அப்பவே சொன்னாங்க "தம்பி,ரெண்டு ரூபா கொடுத்துட்டு போணு ",அவுங்க சொன்னத ஒழுங்கா கேட்டுருந்தா சண்டையே வந்துருக்காது.

இருந்தாலும் இதுல இருந்து நான் ஒன்னு தெரிஞ்சிகிட்டேன்.
'அரண்மனை கிளி ஆத்தா' எங்க பெரியம்மாவோட குடிமிய பிடிச்சத பார்த்தா அவுங்க தான் மாமியாரா இருப்பாங்க.

Your Eyes but My Views

Dear Kiddos,     Another letter from Rajuppa. Wait, wait, wait.  I think I should stop using Rajuppa while writing letters to you, for I h...